
பிரபல மலையாள நடிகை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் திலீப் சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும், அவருக்கு சிறையில் சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவின் சொகுசு வாழ்க்கை சமீபத்தில் அம்பலமானது.தற்போது அதே போன்று திலீப் குறித்தும் தகவல்கள் கசிந்துள்ளன.
கேரள மாநிலம் ஆலுவா சிறையில் திலீப்பிற்கு தேவையான உதவிகளை செய்து கொடுப்பதற்கு தமிழகத்தைச் சேர்ந்த கைதி ஒருவரை சிறை அதிகாரிகள் நியமித்துள்ளதாக தெரிகிறது.
நடிகர் திலீப்பின் துணிகளை துவைத்து கொடுப்பது, சாப்பிட்ட தட்டுகளை கழுவுவது போன்ற பணிகளை இந்த கைதி பார்த்துக்கொள்கிறார். மேலும், சிறை அதிகாரிகளுக்காக சமைக்கப்படும் உணவுகள் தான் திலீப்பிற்கு வழங்கப்படுகின்றன.
அனைத்து கைதிகளும் சாப்பிட்ட பின்னர், திலீப், அதிகாரிகளின் அறைக்கு சென்று தனியாக சாப்பிடுவார், அதே போன்று பொதுவான குளியல் இல்லாமல் மற்ற கைதிகள் குளித்துவிட்டு சென்ற பின்னர் இவர் மட்டும் தனியாக குளிக்கிறாராம்.
இது போன்று இன்னும் சில சிறப்பு சலுகைகள் திரீப்புக்கு வழங்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.