வரதட்சனை கொடுமை வழக்கில் யாரையும் உடனடியாக  கைது செய்யக்கூடாது….உச்சநீதிமன்றம் அதிரடி…

 
Published : Jul 28, 2017, 05:38 AM ISTUpdated : Sep 19, 2018, 12:56 AM IST
வரதட்சனை கொடுமை வழக்கில் யாரையும் உடனடியாக  கைது செய்யக்கூடாது….உச்சநீதிமன்றம் அதிரடி…

சுருக்கம்

dowry case...no immidate arrest...supreme court order

வரதட்சனை கொடுமை வழக்கில் யாரையும் உடனடியாக  கைது செய்யக்கூடாது….உச்சநீதிமன்றம் அதிரடி…

பெண்களுக்கு எதிரான வரதட்சனை கொடுமை வழக்குகளில் பெண்களின் கணவர் அல்லது உறவினர்கள் உள்ளிட்ட யாரையும் உடனடியாக கைது செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் வரதட்சனை கொடுமையால் ஏராளமான பெண்கள்  கடுமையாக பாதிக்கப்பட்டு வழகின்றனர். குறிப்பாக கொலைகள், தற்கொலைகள் என உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.

இந்த கொடுமையில் இருந்து பாதிக்கப்படும் பெண்களை காப்பாற்ற வரதட்சனை கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. 

வரதட்சனை கொடுமை வழக்குகளில், பெண்கள் புகார் கொடுக்கும் பட்சத்தில் உடனடியாக கைது செய்ய வழிவகை உள்ளது. இருப்பினும், வரதட்சனை கொடுமை தடுப்புச் சட்டத்தை பலரும் தவறாக பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்து வருகிறன.



இந்நிலையில், பெண்களுக்கு எதிரான வரதட்சனை கொடுமை வழக்குகளில் உடனடி கைது நடவடிக்கை கூடாது என்று உச்சநீதிமன்றம்  தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் குடும்பநல கமிட்டிகள் அமைக்கப்பட்டு அதன் அறிக்கையை பெற்ற பிறகே கைது நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் கைது நடவடிக்கைக்கு முன் முதற்கட்ட விசாரணை நடத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் அதிரடியாக அறிவித்தனர்.

 

 

PREV
click me!

Recommended Stories

தைரியம் இருந்தால் ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்தை மாற்றுங்க! பாஜகவுக்கு துணை முதல்வர் சவால்!
ரயிலில் லக்கேஜ் கொண்டு போக 1.5 மடங்கு கூடுதல் கட்டணம்! ரயில்வே அமைச்சர் அறிவிப்பு