congress president election:காங்கிரஸ் தலைவர் தேர்தல்:திக்விஜய் சிங் இன்று வேட்புமனு; கழற்றிவிடப்படும் கெலாட்

Published : Sep 29, 2022, 06:02 AM IST
 congress president election:காங்கிரஸ் தலைவர் தேர்தல்:திக்விஜய் சிங் இன்று வேட்புமனு; கழற்றிவிடப்படும்  கெலாட்

சுருக்கம்

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் வேட்புமனுத் தாக்கலுக்கு இன்னும் இரு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தலைவர் பதவிக்கு திக்விஜய் சிங் போட்டியிடுவார் எனத் தெரிகிறது. 

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் வேட்புமனுத் தாக்கலுக்கு இன்னும் இரு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தலைவர் பதவிக்கு திக்விஜய் சிங் போட்டியிடுவார் எனத் தெரிகிறது. 

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தலைவர்  பதவிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில்போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ராஜஸ்தானில் அவரின் ஆதரவாளர்கள் செய்த குழப்பம், அதற்கு பின்புலத்தில் கெலாட் இருந்தது போன்றவற்றால் அவர் கழற்றிவிடப்படுகிறார் எனத் தெரிகிறது

இதனிடையே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மூத்த தலைவர் ஏ.கே.அந்தோனியிடம் நேற்று நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். அப்போது, காங்கிரஸ் வேட்பாளராக யாரை நிறுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக ஆர்.வெங்கடரமணி நியமனம்… யார் இவர்?

இதற்கிடையே ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டும் நேற்று இரவு டெல்லி புறப்பட்டுள்ளார். சோனியா காந்தியை இன்று அசோக் கெலாட் நேரில் சந்தித்துப் பேசுவார் எனத் தெரிகிறது. தலைவர் பதவிக்கு அவர் வேட்புமனுத் தாக்கல் செய்வது இன்னும் உறுதியாகாத நிலையில், சோனியா காந்தியை சமாதானப்படுத்தும் நோக்கில் அசோக் கெலாட் சந்திக்கிறாரா என்பது தெரியவில்லை.

ஆனால், மத்தியப்பிரதேச முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் நேற்று இரவு டெல்லி கேரளாவில் இருந்து டெல்லி புறப்பட்டுள்ளார் அவருடன் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபாலும் சென்றுள்ளார். 

  காங்கிரஸ் கட்சி சார்பில் தலைவர் பதவிக்கு திக்விஜய் சிங் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்யலாம் என அவரின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராகுல் காந்தியுடன் பாரத் ஜோடோ யாத்திரையில் திக்விஜய் சிங் பங்கேற்றிருந்த நிலையில் அங்கிருந்து நேற்று திடீரென புறப்பட்டுள்ளார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு; குட் நியூஸ் சொன்ன மத்திய அரசு !

இதற்கிடையே திருவனந்தபுரம் எம்.பி. சசி தரூர் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாகக் கூறியுள்ளார். அவரும் வேட்புமனுத் தாக்கல் செய்ய தயாராகி வருகிறார்.

மத்தியப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வரான கமல் நாத், காங்கிரஸ் தலைவர்பதவிக்கு போட்டியிடுவதில் விருப்பமில்லை. அடுத்த ஆண்டு மத்தியப்பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருப்பதால், அதில் கவனம் செலுத்தப் போவதாக கமல் நாத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கு வரும் 30ம் தேதியுடன் வேட்புமனுத் தாக்கல் முடிகிறது. வேட்புமனு பரிசீலனை அக்டோபர் 1ம் தேதியும், திரும்பப்பெறும் கடைசித் தேதி 10ம் தேதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிஎப்ஐ தடை: எந்தெந்த மாநில முதல்வர்கள் வரவேற்பு தெரியுமா?

தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17ம் தேதியும், 19ம் தேதி தேர்தல் முடிவும் அறிவிக்கப்படும்.
புதிதாக வரும் காங்கிரஸ் தலைவருக்கு குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல், இமாச்சலப்பிரதேச தேர்தல் பெரும் சவாலாக இருக்கும். 
 

PREV
click me!

Recommended Stories

மதக் கூட்டங்களில் பெண் ஜிஹாதிகள்..! இந்தியாவிற்கு எதிராக படுபயங்கர சதித்திட்டம்..! எல்லையில் தீவிர பாதுகாப்பு..!
IndiGo பயணிகளுக்கு ஷாக் கொடுத்த CEO.. இன்னும் 10 நாளைக்கு இது தான் கண்டிஷன்..!