மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக ஆர்.வெங்கடரமணி நியமனம்… யார் இவர்?

By Narendran S  |  First Published Sep 28, 2022, 10:33 PM IST

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் ஆர்.வெங்கடரமணி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.


மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் ஆர்.வெங்கடரமணி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். தற்போதைய மத்திய அரசின் அட்டர்ஜி ஜெனரல் எனப்படும், தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளார். இதை அடுத்து மத்திய அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக, மூத்த வழக்கறிஞர் ஆர்.வெங்கடரமணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த உத்தரவை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பிறப்பித்து உள்ளார். மேலும் இவர், பதவி ஏற்கும் நாளில் இருந்து மூன்று ஆண்டுகள், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக தொடர்வார் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: குடிபோதைக்கு அடிமையானவர் வயிற்றில் 63 ஸ்பூன்கள்.. அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் - வெளியான அதிர்ச்சி காரணம்!

Tap to resize

Latest Videos

யார் இந்த ஆர்.வெங்கடரமணி? 

1950 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி பாண்டிச்சேரியில் (இப்போது புதுச்சேரி) பிறந்த வெங்கடரமணி, உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராகவும், இந்திய சட்ட ஆணையத்தின் உறுப்பினராகவும் உள்ளார். அவர் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக உச்ச நீதிமன்றத்தில் பயிற்சி செய்து வருகிறார். அவர் மத்திய அரசு, மாநில அரசுகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் சார்பில் பல வழக்குகளில் பங்கேற்றுள்ளார். வெங்கடரமணி தமிழ்நாடு பார் கவுன்சிலில் ஜூலை 1977 இல் பயிற்சியைத் தொடங்கினார்.

இதையும் படிங்க: இந்திய முப்படைக்கு புதிய தலைமை தளபதி நியமனம்... அறிவித்தது மத்திய அரசு!!

1979 இல் உச்ச நீதிமன்றத்தில் பயிற்சியைத் தொடங்கினார். 1997 இல், உச்ச நீதிமன்றத்தால் மூத்த வழக்கறிஞராகப் பரிந்துரைக்கப்பட்டார். 2010 இல் சட்ட ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 2013 இல், அவர் சட்ட ஆணையத்தின் உறுப்பினராக மற்றொரு பதவியைப் பெற்றார். வெங்கடரமணி நீதிபதி எம்.என். வெங்கடாசலையா தலைமையிலான அரசியலமைப்பு மறுஆய்வு ஆணையத்திலும் பணியாற்றியுள்ளார். பல வக்கீல் சங்கங்களின் வாழ்நாள் உறுப்பினராக அவர் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!