இந்திய முப்படைக்கு புதிய தலைமை தளபதி நியமனம்... அறிவித்தது மத்திய அரசு!!

By Narendran S  |  First Published Sep 28, 2022, 7:15 PM IST

இந்தியாவின் முப்படை தலைமை தளபதியாக ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அனில் சௌஹானை நியமித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. 


இந்தியாவின் முப்படை தலைமை தளபதியாக ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அனில் சௌஹானை நியமித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. 1961 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி பிறந்த லெப்டினன்ட் ஜெனரல் அனில் சௌஹான், 1981 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தின் 11 கோர்க்கா ரைபிள்ஸில் பணியமர்த்தப்பட்டார். அவர் தேசிய பாதுகாப்பு அகாடமி, கடக்வாஸ்லா மற்றும் இந்திய ராணுவ அகாடமி, டேராடூன் ஆகியவற்றின் முன்னாள் மாணவர் ஆவார்.

இதையும் படிங்க: 3 முக்கிய ரயில் நிலையங்களை மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்… 10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு!!

Tap to resize

Latest Videos

இவர், மேஜர் ஜெனரல் அந்தஸ்தில் வடக்குக் கட்டளையின் முக்கியமான பாரமுலா பிரிவில் காலாட்படைப் பிரிவுக்குக் கட்டளையிட்டார். பின்னர் லெப்டினன்ட் ஜெனரலாக, வடக்கு கிழக்கில் ஒரு படைக்கு கட்டளையிட்டார். பின்னர் அவர் செப்டம்பர் 2019 முதல் கிழக்கு கட்டளையின் தலைமை தளபதியானார். மே 2021 இல் சேவையில் இருந்து ஓய்வு பெறும் வரை அவர் அந்த பொறுப்பை வகித்தார். மேலும் இவர் அங்கோலாவுக்கான ஐக்கிய நாடுகளின் தூதுவராகவும் பணியாற்றினார். 31 மே 2021 அன்று இந்திய ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றார்.

இதையும் படிங்க: கருக்கலைப்பு செய்ய கணவனின் அனுமதி தேவையில்லை.. கேரள உயர்நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு.

ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும், தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய விஷயங்களில் அவர் தொடர்ந்து பங்களித்தார். இராணுவத்தில் அவரது புகழ்பெற்ற சேவைக்காக, லெப்டினன்ட் ஜெனரல் அனில் சௌஹானுக்கு பரம் விசிட்ட சேவா பதக்கம், உத்தம் யுத் சேவா பதக்கம், அதி விசிட்ட சேவா பதக்கம், சேனா பதக்கம் விசிட்ட சேவா பதக்கம் ஆகியவை வழங்கப்பட்டது. இந்த நிலையில் இவர், இந்தியாவின் முப்படை தலைமை தளபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

click me!