3 முக்கிய ரயில் நிலையங்களை மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்… 10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு!!

By Narendran SFirst Published Sep 28, 2022, 6:43 PM IST
Highlights

டெல்லி, அகமதாபாத், மும்பை ரயில் நிலையங்களை மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

டெல்லி, அகமதாபாத், மும்பை ரயில் நிலையங்களை மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், பிரதமரின் கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தை நீட்டித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ரேசன் அரசி திட்டத்தில், ஏழை மக்களுக்கு 5 கிலோ இலவச உணவு தானியம் வழங்கும் திட்டத்தை மேலும் 3 மாதத்திற்கு நீட்டித்துள்ளது.

இதையும் படிங்க: கருக்கலைப்பு செய்ய கணவனின் அனுமதி தேவையில்லை.. கேரள உயர்நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு.

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வுதியதாரர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 4% அகவிலைப்படி உயர்வு ஜூலை ஒன்றாம் தேதியிலிருந்து முன் தேதியிட்டு வழங்கப்படும். பழுதடைந்துள்ள 3 ரயில் நிலையங்களை மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லி, அகமதாபாத், மும்பை ஆகிய ரயில் நிலையங்களை மேம்படுத்த தோராயமாக ரூ.10,000 கோடி மதிப்பிடப்பட்டுள்ளது என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஜெயிலுக்கு போகனுமுனு ஆசையா இருக்கா..? ஒரு இரவுக்கு ரூ.500.. புதிய சுற்றுலா திட்டம்

மத்திய அமைச்சரவையில் இது குறித்து விவாதிக்கப்பட்டு, ரயில்வேத் துறையின் முன்மொழிவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். முன்னதாக நாட்டின் முக்கிய ரயில் நிலையங்களான டெல்லி, அகமதாபாத், மும்பை (சிஎஸ்எம்டி) ஆகிய ரயில் நிலையங்களை மேம்படுத்த வேண்டும் என இந்தியன் ரயில்வே சார்பில் முன்மொழிவு தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

click me!