பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தலைவர் கைது... அவரது கடையில் இருந்து பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்!!

By Narendran S  |  First Published Sep 28, 2022, 11:49 PM IST

பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தலைவர் சலீம் கைது செய்யப்பட்டதோடு அவருக்கு சொந்தமான கடையில் இருந்து பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 


பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தலைவர் சலீம் கைது செய்யப்பட்டதோடு அவருக்கு சொந்தமான கடையில் இருந்து பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பு நாடு முழுவதும் கிளைகளை பரப்பி செயல்பட்டு வருகிறது. இது இஸ்லாமியர்களுக்கு எதிரான அடக்குமுறைகள், சட்டங்களுக்கு எதிராகவும், மத்திய அரசு, பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு எதிராகவும் குரல் கொடுத்து வந்தது. இந்த அமைப்புக்கு பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததோடு கலவரங்களை தூண்டி வருவதாகவும் குற்றம்சாட்டி வந்தனர்.

இதையும் படிங்க: மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக ஆர்.வெங்கடரமணி நியமனம்… யார் இவர்?

Tap to resize

Latest Videos

மேலும் இந்த அமைப்பை தடை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில் கடந்த 22 ஆம் தேதி நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அத்தோடு மட்டுமில்லாமல் அவ்வமைப்பை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் கிளை அமைப்புகளை சட்டவிரோதமானவை என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.  அதுமட்டுமின்றி அந்த அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

இதையும் படிங்க: குடிபோதைக்கு அடிமையானவர் வயிற்றில் 63 ஸ்பூன்கள்.. அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் - வெளியான அதிர்ச்சி காரணம்!

மேலும் சட்டவிரோத பண பரிவர்த்தனை, பிரதமர் மோடியை கொல்ல சதி என பல்வேறு குற்றச்சாட்டுகளை என்.ஐ.ஏ. இந்த அமைப்பு மீது சுமத்தியுள்ளது. இதனிடையே கேரளா மாநிலம் வயநாடு அடுத்த மானந்தவாடியில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தலைவர் சலீம் என்பவருக்கு சொந்தமான டயர் கடை ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இதை அடுத்து அவ்வமைப்பின் தலைவர் சலீம் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

click me!