எல்லா மசூதிகளையும் தோண்டுங்க... தெலுங்கானா பா.ஜ.க. தலைவர் அசாதுதீன் ஓவைசிக்கு சவால்..!

By Kevin KaarkiFirst Published May 26, 2022, 12:05 PM IST
Highlights

மாநிலத்தில் உள்ள மசூதிக்கள் அனைத்தையும் தோண்டுங்கள். தோண்டும் போது சடலங்கள் கிடைத்தால் அவற்றை நீங்கள் வைத்துக் கொள்ளலாம்.

தெலுங்கானா மாநில பா.ஜ.க. தலைவர் பண்டி சஞ்சய் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசிக்கு சவால் விடுத்துள்ளார். அனுமன் ஜெயந்தி விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் மசூதிகளுக்கு அடியில் சிவ லிங்கங்கள் கண்டெடுக்கப்படுவது பற்றி பேசினார். 

அப்போது, மாநிலத்தில் உள்ள மசூதிகளை அனைத்தையும் தோண்டுங்கள், அதன் அடியில் சிவலிங்கங்கள் இருந்தால் மசூதிக்களை இந்துக்களிடம் கொடுத்து விடுங்கள். சிவலிங்கங்களுக்கு மாறாக சடலங்கள் கிடைத்தால், அவற்றை நீங்களே (முஸ்லிம்கள்) வைத்துக் கொள்ளுங்கள் என கூறினார். 

இந்து ஏக்தா யாத்ரா:

கரிம்நகரில் நடைபெற்ற அனுமன் ஜெயந்தி நிகழ்ச்சியை முன்னிட்டு இந்து ஏக்தா யாத்ரா நடைபெற்றது. அதில் தெலுங்கானா மாநிலத்துக்கான பா.ஜ.க. தலைவர் பண்டி சஞ்சய் கலந்து கொண்டு பேசினார். பேசும் போது, “எந்த பகுதியில் மசூதிக்களை தோண்டினாலும், சிவலிங்கங்கள் தான் கிடைக்கின்றன. மாநிலத்தில் உள்ள மசூதிக்கள் அனைத்தையும் தோண்டுங்கள். தோண்டும் போது சடலங்கள் கிடைத்தால் அவற்றை நீங்கள் (முஸ்லிம்கள்) வைத்துக் கொள்ளலாம். ஒருவேளை சிவலிங்கங்கள் கிடைத்தால் மசூதிக்களை எங்களிடம் கொடுத்து விடுங்கள் என ஓவைசிக்கு சவால் விடுக்கிறேன். சவாலை ஏற்றுக் கொள்கிறீர்களா?” என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய பண்டி சஞ்சய் தெலுங்கானாவில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் பட்சத்தில் சிறுபான்மையினருக்கான ஒதுக்கீடுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விடும். இதோடு மாநிலத்தில் உருது மொழிக்கு தடை விதிக்கப்படும். “ஒரு வேளை ராம ராஜ்ஜியம் அமைந்தால், நாங்கள் நிச்சயம் உருது மொழிக்கு தடை விதிப்போம். நாட்டில் எந்த பகுதியில் குண்டுவெடிப்பு நடந்தாலும், அதற்கு மதரசாக்கள் தீவிரவாதிகளுக்கு பயிற்சி மையங்களாக மாறி இருப்பதே காரணமாக உள்ளது. அவற்றை கண்டுபிடிக்க வேண்டும்,” என அவர் தெரிவித்தார். 

ஒதுக்கீடு ரத்து:

மாநிலத்தில் ஆட்சி அமைத்ததும், தீய சக்திகளை அகற்றி விட்டு ராம ராஜ்ஜியத்தை அமைப்போம் என அவர் தெரிவித்தார். “பா.ஜ.க. ஆட்சி அமைத்தால், நாம் மதரசாக்கள் அனைத்தயும் மூடி விட முடியும், சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டு வரும் ஒதுக்கீடுகள் அனைத்தையும் நிறுத்தி விட்டு, அவற்றை எஸ்.சி., எஸ்.டி., ஒ.பி.சி. மற்றும் இ.பி.சி. போன்ற பிரிவினருக்கு பிரித்துக் கொடுப்போம். இரண்டாவது அலுவல் மொழியாக இருக்கும் உருது மொழிக்கு தடை விதிப்போம்,” என பண்டி சஞ்சய் தெரிவித்தார். 

click me!