பணமோசடி விவகாரம்... மகாராஷ்டிரா அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை விசாரணை..!

By Kevin KaarkiFirst Published May 26, 2022, 10:39 AM IST
Highlights

ஊழல் வழக்கில் அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வரும் சம்பவம் அம்மாநி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

மகாராஷ்டிரா மாநிலத்தின் போக்குவரகத்து துறை அமைச்சர் அனில் பரப்புக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகிறது. நிலம் கையகப்படுத்திய விவகாரத்தில் ஊழல் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வருகிறது. 

பூனே, மும்பை மற்ரும் டபோலி ஆகிய பகுதிகளில் உள்ள அனில் பரப் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வருகிறது. சிவ சேனா தலைவர் மீது ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து இருக்கும் நிலையில், இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.

நிலத்தில் முறைகேடு:

2017 ஆம் ஆண்டு அனில் பரப் மகாராஷ்டிரா மாநிலத்தின் ரத்தினகிரி மாவட்டத்தை அடுத்த டபோலி பகுதியில் நிலம் ஒன்றை வாங்கி இருக்கிறார். இந்த நிலத்தின் மதிப்பு ரூ. 1 கோடியே 10 லட்சம் ஆகும். எனினும், இந்த நிலத்தை 2019 ஆம் ஆண்டில் தான் அவர் பதிவு செய்து இருக்கிறார். 2017 முதல் 2020 வரையிலான காலக்கட்டத்தில் அந்த பகுதியில் தங்கும் விடுதி கட்டப்பட்ட நிலையில், 2020 ஆண்டு நிலம் மும்பையை சேர்ந்த கேபிள் ஆபரேட்டர் சதானந்த் கதம் என்பவருக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது. 

2017 ஆம் ஆண்டே இந்த நிலத்தில் தங்கும் விடுதியை கட்ட ரூ. 6 கோடி வரை செலவு செய்யப்பட்டதை அடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஊழல் வழக்கில் அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வரும் சம்பவம் அம்மாநி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

பழைய வழக்கு:

முன்னதாக பணி நீக்கம் செய்யப்பட்ட காவல் துறை அதிகாரி சச்சின் வேஸ் அமைச்சர் அனில் பரப் பதவி வழங்க பணம் வசூலித்ததாக அமலாக்கத் துறையில் புகார் அளித்து இருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக இவர் மீதான குற்றத்திற்கு எந்த ஆதாரமும் கிடைக்காததை அடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமலாக்கத் துறை அமைச்சரின் வாதத்தை பதிவு செய்தது. 

click me!