RBI-யிடம் ஆலோசித்த பிறகே பணமதிப்பிழப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது... உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்!

By Narendran SFirst Published Dec 6, 2022, 7:32 PM IST
Highlights

ரிசர்வ் வங்கியுடன் ஆலோசனை செய்த பிறகே பணமதிப்பிழப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கியுடன் ஆலோசனை செய்த பிறகே பணமதிப்பிழப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி அன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். மேலும் கருப்புப் பணத்தையும் ஊழலையும் ஒழிக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது.

இதையும் படிங்க: முதல்வர் வீட்டில் திடீரென வெடித்த துப்பாக்கி.. அதிர்ச்சியில் காவல்துறை.! பரபரப்பு சம்பவம்.!

மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான வழக்கு, விசாரணையின் போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர். வெங்கடரமணி, கடந்த 2016 ஆம் ஆண்டு, இந்திய ரிசர்வ் வங்கியுடன் கலந்தாலோசித்த பிறகே பணமதிப்பிழப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதில், மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாக எழுப்பப்படும் கேள்விக்கே இடமில்லை என்று தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: 20 முறை கல்லால் தாக்கப்பட்ட இளைஞர்.! 3 பெண்கள், 3 ஆண்கள் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச்! வெளியான சிசிடிவி வீடியோ

இதையடுத்து, உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி.நாகார்ஜுனா, பணமதிப்பிழப்பு கொள்கையை இந்திய ரிசர்வ் வங்கி எதிர்த்திருந்தால், அந்த ஆட்சேபனையை மத்திய நிராகரித்திருக்குமா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர், இந்த கேள்வி இந்த வழக்கில் எழவே இல்லை. பணமதிப்பிழப்பு அறிவிப்பு பின்னர் நாடாளுமன்ற சட்டமாக்கப்பட்டது. நாடாளுமன்றம், அரசாங்கத்துடன் உடன்பட்டது. தவிர, இறையாண்மை கொண்ட சக்தியாக, ரிசர்வ் வங்கியுடன் உடன்படாமல் இருப்பதற்கான உரிமை மத்திய அரசுக்கு உள்ளது என்று விளக்கம் அளித்தார். 

click me!