பள்ளிக் குழந்தைகள் மூலம் ஸ்கூல்பேக்கில் போதைப்பொருள் கடத்தல்: கேரளாவில் ஆதாரத்தை வெளியிட்ட ஏசியாநெட்

By Pothy RajFirst Published Dec 6, 2022, 2:39 PM IST
Highlights

கேரள மாநிலத்தில் பள்ளி செல்லும் குழந்தைகள் கொண் செல்லும் ஸ்கூல்பேக்கில் போதைப்பொருட்கள் கடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சிகர சம்பவத்தை ஏசியாநெட் நியூஸ் வீடியோவாக வெளியிட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் பள்ளி செல்லும் குழந்தைகள் கொண் செல்லும் ஸ்கூல்பேக்கில் போதைப்பொருட்கள் கடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சிகர சம்பவத்தை ஏசியாநெட் நியூஸ் வீடியோவாக வெளியிட்டுள்ளது

கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள ஆழியூரில் 8-ம்வகுப்பு படிக்கும் குழந்தையின் புத்தகப் பையில் போதை மருந்துகள் தினசரி கடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை அந்த 13வயது குழந்தை வெளியிட்டதையடுத்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் 2ம் கட்டத் தேர்தலில் வாக்களிக்காமல் புறக்கணித்த 3 கிராம மக்கள் ! என்ன காரணம்

இது குறித்து ஏசியாநெட் செய்தி வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது

கேரளாவில் போதைப் பொருட்களுக்கு எதிராக மாநில அரசும், தன்னார்வ அமைப்புகளும் தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வரும் நிலையில், பள்ளி செல்லும் குழந்தைகள் இந்த போதை மாபியா வலையில் விழுந்துள்ளனர்.

வடகரா ஆழியூரில் படிக்கும் 8ம் வகுப்பில் ஒரு மாணவி படிக்கிறார். அதே பள்ளியில் பயிலும் ஒரு மாணவரும் இந்த மாணவியும் நண்பர்கள். தனக்கு நேர்ந்த அனுபவங்களையும், ஒருபிஸ்கட் சாப்பிட்டதால் ஏற்படும் அனுபவங்களையும் அந்த மாணவி, மாணவரிடம் தெரிவித்துள்ளார்.

தனக்கு வேறுஒரு மாணவி மூலம் இந்த பிஸ்கெட் கிடைத்தது என்றும், அந்த பிஸ்கெட் கிடைத்த இடத்துக்குச் சென்றபோது, போதை பிஸ்கெட் மட்டுமின்றி, போதை ஊசிகளும் கிடைத்தன என்று தெரிவித்துள்ளார். அந்த பிஸ்கெட்டை சாப்பிட்டால் மீண்டும், மீண்டும் சாப்பிடும் உணர்வு ஏற்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பெருமையை உலகிற்கு பறைசாற்றுவோம்... ஜி20 ஆலோசனை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு!!

ஒருவர் கொடுக்கும் பொருட்களுடன் தலச்சேரிக்கு செல்லும் மாணவர்கள், அங்கு போதைப் பொருட்கள் தேவைப்படுவோர் கையில் எமோஜி படத்தை வரைந்தும், அடையாளக் குறியீடு செய்தும் காண்பிப்பார்கள் அவர்களுக்கு அந்தப் பொருட்களை வழங்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் நடத்தையிலும் திடீரென பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதையடுத்து, பள்ளிநிர்வாகமும் பெற்றோருக்குத் தெரிவித்துள்ளது.

பெற்றோர்களும் சமீபகாலமாக தங்கள் குழந்தைகள் செயல்பாட்டில் மாற்றங்கள் இருப்பதையும், கழிவறை, குளியலறைக்குச் சென்றுவிட்டு வரும்போது, முகத்தில் பெரிய சலனம் காணப்படுவதையும் தெரிவித்தனர். 

இதையடுத்து, மாணவர்களின் பெற்றோர் சொம்பலா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போதைப் பொருட்களுக்கு அடிமையான மாணவர்களை அழைத்து போலீஸார் விசாரணை நடத்தி நடந்த சம்பவங்களை வாக்குமூலமாகப் பெற்றனர்.

இமாச்சலில் எங்க ஆட்சி.. பாஜகவுக்கு திகில் காட்டும் காங்கிரஸ் - இந்தியா டுடே கருத்து கணிப்பு சொல்வது என்ன?

இதில் பாதிக்கபட்ட 13வயது சிறுமி தனக்கு மட்டுமல்ல, பள்ளியில் படிக்கும் பல மாணவிகளுக்கும் போதை பிஸ்கட் சாப்பிட்ட அனுபவம் இருக்கிறது. இது குறித்து பள்ளி நிர்வாகமும், குழந்தைகள் நலன் அமைப்புக்குத் தெரிவிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, ஆழியூரைச் சேர்ந்த அத்னன் என்பவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 


 

click me!