Gujarat elections:குஜராத் தேர்தலில் முஸ்லிம்கள் வாழும் கிராமம் வாக்களிக்காமல் புறக்கணிப்பு: அதிகாரிகள் மறுப்பு

By Pothy Raj  |  First Published Dec 6, 2022, 11:58 AM IST

குஜராத் மாநிலத்தில் நடந்த 2-ம் கட்டத் தேர்தலில் கேடா மாவட்டத்தில் உள்ள உதேலா கிராமத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் வாக்களிக்காமல் புறக்கணித்தனர். ஆனால், அவ்வாறு ஏதும் நடக்கவில்லை என்று அதிகாரிகள் மறுக்கிறார்கள்.


குஜராத் மாநிலத்தில் நடந்த 2-ம் கட்டத் தேர்தலில் கேடா மாவட்டத்தில் உள்ள உதேலா கிராமத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் வாக்களிக்காமல் புறக்கணித்தனர். ஆனால், அவ்வாறு ஏதும் நடக்கவில்லை என்று அதிகாரிகள் மறுக்கிறார்கள்.

குஜராத்தில் 182 தொகுதிகளுக்கும் 2 கட்டங்களாகத் தேர்தல் நடந்தது. முதல்கட்டத் தேர்தல் டிசம்பர்1ம்தேதியும், 2ம் கட்டத் தேர்தல் டிசம்பர் 5ம் தேதியும் நடந்தது. இதில் 14 மாவட்டங்களில் உள்ள வடக்கு மற்றும் மத்திய மண்டல மாவட்டங்களில் 93 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. வரும் 8ம் தேதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

Tap to resize

Latest Videos

குஜராத் 2ம் கட்டத் தேர்தலில் வாக்களிக்காமல் புறக்கணித்த 3 கிராம மக்கள் ! என்ன காரணம்

கேடா மாவட்டத்தில் உள்ள மத்தார் தாலுகாவில் உந்தேலா கிராமத்தில் மொத்தம் 3700 வாக்காளர்கள் உள்ளனர். இதில் பெரும்பகுதி அதாவது 1,700க்கும் மேற்பட்டோர் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இந்நிலைியல், நேற்று நடந்த 2ம் கட்டத் தேர்தலில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த அனைவரும் தேர்தலில் வாக்களிக்காமல் புறக்கணித்தனர்.

உந்தேலா கிராமத்தைச் சேர்ந்த முஸ்லிம் தலைவர் மக்புல் சயத் கூறுகையில் “ குற்றவழக்கில் போலீஸார் ஒருதரப்பாக நடந்து, முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்களைத் தாக்கியதற்கு எதிராகவும், குற்றவாளியை கைது செய்யக் கோரியும் எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் தேர்தலில் வாக்களிக்கவில்லை. எங்கள் மீது தாக்குதல் நடத்திய போலீஸாரை இதுவரை சஸ்பெண்ட் செய்யவில்லை. இதனால் தேர்தலைப் புறக்கணித்தோம்” எனத் தெரிவித்தார்

2024 மக்களவைத் தேர்தலுக்கு தயாராவது எப்படி? பாஜக உயர் நிர்வாகிகள் கூட்டம் தொடங்கியது

ஆனால், கேடா மாவட்ட ஆட்சிய கே.எல். பச்சானி கூறுகையில் “ யாரும் தேர்தலை புறக்கணிக்கவில்லை. தேர்தல் அதிகாரி அளித்த அறிக்கையில், உந்தேலா கிராமத்தில் முஸ்லிம்கள் யாரும் தேர்தலில்வாக்களிக்காமல் புறக்கணித்ததாக தகவல் இல்லை. 43 சதவீதம் அங்கு வாக்குபதிவாகியுள்ளது” எனத் தெரிவி்த்தார்

குஜராத்தில் ஆட்சியை கைப்பற்றப் போவது யார்? வெளியானது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு!!

அக்டோபர் மாதம் நடந்த கர்பா நிகழ்ச்சியில் நடந்த மோதலில் கல்வீசித் தாக்கப்பட்டதில் போலீஸார் உள்பட 7 பேர் காயமடைந்தனர். இதில் போலீஸார் தங்கள் மீது கல்வீசியவர்களை அடையாளம் கண்டு சீருடையில் வராமல், வந்து கிராமத்தைச் சேர்ந்த சிலரை தாக்கினர், லத்தியால் அடித்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியது. இந்த சம்பவத்துக்கு எதிராகவே முஸ்லிம்கள் வாக்களிக்காமல் புறக்கணித்ததாகத் தெரிவித்தனர்.

click me!