
நாடு முழுவதும் போதிய பணமின்றி பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ள நிலையில்,
இன்னும் ஓரிரு மாதங்களில் நாடு முழுவதும் பணப்புழக்கம் இயல்புநிலைக்கு வந்துவிடும் என மத்தியஅரசு தெரிவித்துள்ளது.
கருப்புப் பணப்புழக்கம், ஊழல் போன்றவற்றை முற்றிலுமாக ஒழிக்கும் விதமாக மத்திய அரசு 500 மற்றும்
1000 ரூபாய் நோட்டுகள் செல்லாதது என ஏற்கெனவே அறிவித்தது.
அதற்குப் பதிலாக 500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் புதிய நோட்டுகள் வெளியிடப்பட்டபோதிலும்,
அன்றாடத் தேவைகளுக்கான பணப்பரிமாற்றத்திற்கு போதிய பணமின்றி பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குஆளாகினர்.
இன்னமும் நிலைமை சீரடையாமல் இருக்கும் நிலையில், இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய
மத்திய அரசுக்கான முதன்மை பொருளாளதார ஆலோசகர் திரு. அரவிந்த் சுப்பிரமணியன்,
இன்னும் ஓரிரு மாதங்களில் நாடு முழுவதும் பணப்புழக்கம் இயல்புநிலைக்கு வந்துவிடும் என கூறினார்.
மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், சில சிக்கல்கள் ஏற்பட்டபோதிலும்,
அது குறுகிய காலத்திற்கு மட்டுமே என்றும், நீண்டகால பலன்கள் அதிகம் என்றும் குறிப்பிட்டார்.
ரியல் எஸ்ட்டேட் வர்த்தகத்தில் விலைஉயர்வை கட்டுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாகவும்
இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்