ரூ.4 கோடிக்கு செல்லாத நோட்டு காணிக்கை: திருப்பதி ஏழுமலையானுக்கே நாமம்

First Published Mar 3, 2017, 5:11 PM IST
Highlights
The black money counterfeit money in an attempt to eradicate corruption in circulation


பிரதமர் மோடியின் ரூ.500, ரூ.1000 நோட்டு தடைக்குப் பின், திருப்பதி பாலாஜி கோயிலில் ரூ. 4 கோடிக்கு செல்லாத ரூபாய் நோட்டுகள் குவிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் கருப்பு பணம், கள்ளநோட்டு, ஊழலை ஒழிக்கும் முயற்சியில், புழக்கத்தில் இருந்த ரூ.1000, ரூ.500 நோட்டுகளை செல்லாது என கடந்த ஆண்டு நவம்பர் 8-ந் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். அதைத் தொடர்ந்து மக்கள் செல்லாத நோட்டுகளை வங்கியில் கொடுத்து, மாற்றிக்கொண்டனர். இதில் கடவுளுக்கு காணிக்கை செலுத்துபவர்கள் செல்லாத நோட்டுகளாகவே செலுத்தி வந்தனர்.

மேலும், வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ள காலக்கெடு முடிந்தபின்னும் செல்லாத ரூபாயை கையில் வைத்திருப்பவர்கள், என்ன செய்வது எனத் தெரியாமல் கோயில் உண்டியல்களில் செலுத்தி வந்தனர். அவ்வாறு கடந்த 2 மாதங்களில் மட்டும் திருப்பதி கோயிலில் ரூ.500, ரூ.1000 நோட்டுகளாக ரூ. 4 கோடி வந்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவிக்கிறது.

திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி டி சாம்பசிவ  ராவ் கூறுகையில்,“ மத்திய அரசு செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1000 நோட்டுகள் ரூ. 4 கோடிக்கு உண்டியலில் காணிக்கையாக வந்துள்ளன. இது தொடர்பாக ஏற்கனவே மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் நாங்கள் கடிதம் எழுதி இருக்கிறோம்.

ஆனால், இன்னும் அவர்களிடம் இருந்து எந்த விதமான பதிலும் வரவில்லை'' எனத் தெரிவித்தார்.

செல்லாத ரூ. 4கோடியை  வைத்து என்ன செய்வது எனத் தெரியாமல் அதிகாரிகள் கையை பிசைந்து வருகின்றனர்.

click me!