சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறி டெல்லி காவல்துறை காங்கிரஸ் கட்சியின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுமதி மறுத்துள்ளது.
ராகுல் காந்தியை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று தலைநகர் டெல்லியில் உள்ள ராஜ்காட்டில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதைக் காரணம் காட்டி டெல்லி போலீசார் அந்த உண்ணவிரதப் போராட்டத்துக்கு அனுமதி அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.
அசம்பாவிதங்களைத் தவிர்க்க ராஜ்காட் பகுதியில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சியினர் தடையை மீறி போராட்டம் நடத்த உள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்தனர். அதன்படி, காங்கிரஸ் கட்சியினர் காவல்துறை அனுமதி மறுத்ததை மீறி அமைதி வழியில் போராட்டம் நடத்துகின்றனர்.
ISRO: 36 செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த இஸ்ரோவின் எல்விஎம் 3 ராக்கெட்
LIVE: Sankalp Satyagraha, Raj Ghat, New Delhi. https://t.co/ElTyxe5nC3
— Congress (@INCIndia)போராட்டத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்க்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருக்கிறார்கள். நாடு முழுவதும் உள்ள காந்தி சிலை முன்பு இதேபோல அமைதி வழியில் சத்தியாகிரகப் போராட்டம் நடந்த காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
இதனிடையே, சனிக்கிழமை ராகுல் காந்தி தனது தகுதிநீக்கம் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். "எனது அடுத்த பேச்சுக்கு பிரதமர் பயந்ததால்தான் தகுதி நீக்கம் செய்யப்பட்டேன். அவரது கண்களில் பயத்தைக் காண்கிறேன். அதனால்தான் நான் நாடாளுமன்றத்தில் பேசுவதை அவர்கள் விரும்பவில்லை" என ராகுல் காந்தி கூறினார்.
மன்னிப்புக் கோரும் பாஜகவின் கோரிக்கைகளுக்கு பதிலளித்த ராகுல் காந்தி, "என் பெயர் சாவர்க்கர் அல்ல, காந்தி. மன்னிப்பு கேட்கமாட்டேன்" என்று தெரிவித்தார்.
மோடி என்றாலே ஊழல் தானே! வைரலாகும் குஷ்புவின் பழைய ட்வீட்!