Delhi MCD Mayor Election: யார் இந்த ஷெல்லி ஓபராய் ?| டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி அபார வெற்றி

Published : Feb 22, 2023, 02:47 PM ISTUpdated : Feb 22, 2023, 03:07 PM IST
Delhi MCD Mayor Election: யார் இந்த ஷெல்லி ஓபராய் ?| டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி  அபார வெற்றி

சுருக்கம்

டெல்லி மேயரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் ஷெல்லி ஓபராய் வெற்றி பெற்று புதிய மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

டெல்லி மேயரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் ஷெல்லி ஓபராய் வெற்றி பெற்று புதிய மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜகவின் ரேஹா குப்தாவைவிட 34 வாக்குகள் கூடுதலாக ஷெல்லி ஓபராய் பெற்று வாகை சூடினார்.

டெல்லி மேயர் தேர்தல் கவுன்சிலர்கள்  அமளியால் கடந்த 3 முறை நடத்தமுடியாமல் போனது. உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், அளிக்கப்பட்ட உத்தரவின்படி, டெல்லி மேயர் தேர்தல் இன்று நடந்தது.

மிகவும் ஒழுங்கீனமான நகரம் டெல்லிதான்: இன்போசிஸ் நாராயண மூர்த்தி

இதில் டெல்லி மாநாகராட்சியில் மொத்தம் உள்ள 260 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 134 உறுப்பினர்களுடன் பெரும்பான்மையாக இருக்கிறது. 2வது இடத்தில் 109 உறுப்பினர்களுடன் பாஜக2வது இடத்தில் இருக்கிறது. காங்கிரஸ் கட்சி 9 உறுப்பினர்களுடன் 3வது இடத்தில் இருக்கிறது.

டெல்லி துணை நிலை ஆளுநர் சக்சேனாவால் நியமிக்கப்பட்ட நியமன உறுப்பினர்களும் மேயர் தேர்தலில் வாக்களிப்பார்கள் என்று அறிவிக்ககப்பட்டது. இதை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி குரல் கொடுத்ததால் 3 முறை தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆம் ஆத்மி சார்பில் ஷெல்லி ஓபராய் கட்சிஉச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். 

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மட்டுமே மேயர்  தேர்தலில் வாக்களிக்க முடியும் என்று கூறி தேர்தலை நடத்தக் கூறி கடந்த 17ம் தேதி உத்தரவிட்டது. இதன்படி இன்றுதேர்தல் நடந்தது.

இந்த தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் ஷெல்லி ஓபராய் மற்றும் பாஜக சார்பில் குப்தா களத்தில் இருந்தனர். இதில் ஷெல்லிக்கு 150வாக்குகளும், குப்தாவுக்கு 116 வாக்குகளும் கிடைத்தன.

டெல்லி துணை முதல்வர் மணி்ஷ் ஷிசோடியா மீது விசாரணை: சிபிஐ-க்கு உள்துறை அமைச்சகம் பச்சைக்கொடி

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில் “ டெல்லி மக்கள் வென்றுள்ளார்கள், அராஜகம் தோல்வி அடைந்துள்ளது” எனத் தெரிவித்தார்

டெல்லி துணை முதல்வர் மணிஷ் ஷிசோடியா கூறுகையில் “ அராஜகம் தோற்றுள்ளது, மக்கள் வென்றுள்ளனர். ஆம் ஆத்மி வேட்பாளர்கள், தொண்டர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். மீண்டும் டெல்லி மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். டெல்லி மேயர் ஷெல்லி ஓபராய்க்கு வாழ்த்துகள்” எனத் தெரிவித்தார்

யார் இந்த ஷெல்லி ஓபராய்

டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்டு வென்ற ஷெல்லி ஓபராய் கடந்த 2013ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தவர். 

டெல்லி மேயராகவுள்ள ஷெல்லி ஓபராய் முதல்முறையாக டெல்லி மாநகராட்சி தேர்தலில் வென்று கவுன்சிலராகியுள்ளார். 39வயதான ஷெல்லி ஓபராய் டெல்லி பல்கலைக்கழகத்தில் கவுரவ விரிவுரையாளராக இருந்தார். 

டெல்லி மாநகராட்சித் தேர்தலில் கழக்கு படேல் நகர் வார்டில் பாஜக தலைவர் ஆதேஷ் குப்தாவின் பகுதியில் போட்டியிட்ட ஓபராய், பாஜகவின் தீபாலி குமாரை 269 வாக்குகளில் தோற்கடித்தார். இந்த பகுதியில் பாஜக வலிமையாக இருந்தபோதிலும் ஓபராய் வென்றார்.

இதென்ன இங்கிலாந்தா! இங்கிலீஸ்ல பேசுறீங்க! விவசாயியை கடிந்து கொண்ட நிதிஷ் குமார்

டெல்லியில் பிறந்து வளர்ந்த ஷெல்லி ஓபராய், கடந்த 2013ல் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து, 2020ம் ஆண்டில் மாநில மகளிர் பிரிவு துணைத் தலைவராகினார். இந்திராகாந்தி மேலாண்மை பள்ளியில் எம்பிஏ பிரிவில் முனைவர் பட்டம் பெற்றவர் ஓபராய். இந்திய வர்த்தகக் கூட்டமைப்பில் வாழ்நாள் உறுப்பினராகவும் ஷெல்லி ஓபராய் உள்ளார்.

டெல்லி பல்கலைக்கழகம் தவிர, என்எம்ஐஎம்எஸ், ஐபி, இந்திரா காந்தி பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளராக ஷெல்லி ஓபராய் இருந்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Bus fares: விமானத்தில் மட்டுல்ல இனி பேருந்திலும் போக முடியாது போல.! பிளைட் டிக்கெட் ரேட்டிற்கு உயர்ந்த பேருந்து கட்டணம்.!
Check Mate: மோடியுடன் புதின் குடித்த பாயாசத்தால், கலங்கிய அமெரிக்க அதிபரின் அடிவயிறு...! இந்தியாவை முக்கிய கூட்டாளி என அறிவித்த டிரம்ப்.!