
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் அமலாக்கத்துறை, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலை ஏப்ரல் 15ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, டெல்லி திகார் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை கைது மற்றும் அமலாக்கத்துறை காவலுக்கு அனுப்பியதற்கு எதிராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை கைது மற்றும் அமலாக்கத்துறை காவலுக்கு அனுப்பியதற்கு எதிராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. அவரது கைது சட்டத்துக்கு புறம்பானது அல்ல எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வழக்கு விசாரணையின்போது, அமலாக்கத்துறை வழங்கி உள்ள ஆதாரங்கள் படிப் பார்த்தால் மற்றவர்களுடன் இணைந்து இந்த விவகாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலும் ஈடுபட்டிருக்கிறார் என்பதை காண முடிகிறது என நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது மற்றும் அவரை காவலுக்கு அனுப்பியது என்பது சட்டத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவே தவிர தேர்தல் நேரம் என்பதால் எடுக்கப்பட்ட முடிவு அல்ல என தெரிவித்த டெல்லி உயர் நீதிமன்றம், தேர்தல் நேரம் என்பதால் விசாரணைக்கு வர முடியாது என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் கருத்து தெரிவித்தது.
முதல்வரே காங்கிரஸ் கட்சியின் இந்த மோசடி வாக்குறுதியை ஏற்றுக் கொள்வாரா? இறங்கி அடிக்கும் ராமதாஸ்..!
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை கைது மற்றும் அமலாக்கத்துறை காவலுக்கு அனுப்பியதற்கு எதிராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.