மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் அல்ல என்று டெல்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் அல்ல என்று டெல்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. அவருக்கு ஜாமீன் வழங்கவும் மறத்துவிட்டது. தன் மீதான வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்வதாவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி ஆம் ஆத்மி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மதுபானக் கொள்கையில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, எம்.பி.,சஞ்சய் சிங், தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவ் மகள் கவிதா ஆகியோர் கைது செய்யப்படடு திகார் சிறையில் உள்ளனர்.
இந்த வழக்கில் கடந்த மார்ச் 21ஆம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கைதுசெய்யப்பட்டார். அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து, அவரது வீட்டிற்குச் சென்ற அமலாக்கத்துறை அவரைக் கைது செய்தது. சில தினங்களுக்கு முன் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
சுயமரியாதை இயக்கம் முதல் நாடகமேடை வரை... படிப்படியாக வளர்ந்த ஆர்.எம்.வீரப்பனின் குடும்பப் பின்னணி!
இந்நிலையில், ஜாமீன் கோரி கெஜ்ரிவால் சார்பில் தொடரப்பட்ட வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று விசாரித்தது. அப்போது, கெஜ்ரிவாலின் கைது சட்டத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை, தேர்தலுக்காக எடுக்கப்பட்டது அல்ல என்றும் முதல்வராக இருப்பதற்காக சிறப்புச் சலுகை காட்ட முடியாது என்றும் நீதிபதிகள் கூறினர்.
பொதுவாழ்வில் இருப்பவர்கள் சலுகைகளுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும். தேர்தல் நேரம் என்பதால் விசாரணைக்கு வர முடியாது என கெஜ்ரிவால் கூறுவதை ஏற்க முடியாது. மற்றவர்களுடன் இணைந்து கெஜ்ரிவாலும் முறைகேடு செய்துள்ளார் என்று தெரிகிறது. தேர்தல் நேரத்தை கணக்கிட்டு அமலாக்கத்துறை கைது செய்துள்ளது என்பதை ஏற்க முடியாது என்றும் தெரிவித்தனர்
அரசியல் தாக்கத்தில் இருந்து விலகி இருப்பதே நீதித்துறையின் சுதந்திரம். நீதிமன்றங்கள் அரசியல் விவகாரங்களுக்குள் செல்ல முடியாது. அமலாக்கத்துறை அளித்துள்ள ஆதாரத்தின் படி, மதுபான கொள்கை முறைகேடு மூலம் கிடைத்த பணம் கோவா தேர்தலில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். திகார் சிறையில் உள்ள கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்க முடியாது என்றும் கூறி கெஜ்ரிவாலின் மனுவை தள்ளுபடி செய்தனர்.
சிகரெட் பிடித்த பெண்களை குறுகுறுவென்று உற்றுப் பார்த்த இளைஞர் கொடூரக் கொலை!