தலைநகர் டெல்லியில் பாஜகவை தலைத்தெறிக்க ஓடவிட்ட ஆம் ஆத்மி... கெத்து காட்டும் கெஜ்ரிவால்..!

By vinoth kumarFirst Published Feb 11, 2020, 10:36 AM IST
Highlights

டெல்லி மாநிலத்தில் 70 உறுப்பினர் கொண்ட சட்டப்பேரவை தேர்தல் கடந்த 8-ந்ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் 62.59 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி பலத்த பாதுகாப்புடன் இன்று காலை தொடங்கியது. 21 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. முதல் கட்டமாக  தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பின்னர் மின்னணு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றது. 

டெல்லியில் ஆட்சியமைக்க தேவையான இடங்களை விட அதிக இடங்களில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை பெற்றுள்ளது. தற்போது நிலவரப்படி ஆம் ஆத்மி 53 இடங்களிலும், பாஜக 17 இடங்களிலும் முன்னலை பெற்றுள்ளது. 

டெல்லி மாநிலத்தில் 70 உறுப்பினர் கொண்ட சட்டப்பேரவை தேர்தல் கடந்த 8-ந்ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் 62.59 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி பலத்த பாதுகாப்புடன் இன்று காலை தொடங்கியது. 21 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. முதல் கட்டமாக  தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பின்னர் மின்னணு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றது.  

வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே ஆம் ஆத்மி கட்சி அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. ஆட்சியமைக்க 36 இடங்கள் தேவை என்ற நிலையில், ஆம் ஆத்மி கட்சி 53 இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது. பாஜக 17 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. 3-வது முறையாக கெஜ்ரிவால் முதல்வராக பதவியேற்க உள்ளதால் ஆம் ஆத்மி தொண்டர்பள் உற்சாகத்தில் இனிப்புகளை பகிர்ந்து வருகின்றனர். ஆம் ஆத்மி கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

click me!