வரலாறு காணாத வன்முறை வெறியாட்டம்..! டெல்லியில் 46 பேர் பலி..!

By Manikandan S R SFirst Published Mar 2, 2020, 1:36 PM IST
Highlights

டெல்லி வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 45 ஆக இருந்து வந்த நிலையில் இன்று மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து பலி எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளது.

சிஏஏ ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் மத்தியில் தலைநகர் டெல்லியில் வரலாறு காணாத வன்முறை அண்மையில் வைத்தது. இப்போராட்டத்தில் இதுவரையிலும் 46 பேர் பலியாகி இருக்கின்றனர். 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். பல்வேறு இடங்களில் வன்முறையாளர்கள் பொதுச்சொத்துக்களை சூறையாடியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

டெல்லியில் நடக்கும் வன்முறையை மத்திய உள்துறை உன்னிப்பாக கவனித்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர டெல்லி அரசுடன் இணைந்து கடும் நடவடிக்கைகள் எடுத்தது. பல்வேறு இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் வன்முறையை ஒடுக்க காவல்துறைக்கு முழு சுதந்திரம்  அளிக்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் தெரிவித்திருந்தார். டெல்லி மக்கள் அமைதி காக்க வேண்டுமென பிரதமர் மோடியும் வேண்டுகோள் விடுத்திருந்ததார்.

4ம் வகுப்பு மாணவியை காமவெறியுடன் சீரழித்த 8ம் வகுப்பு மாணவர்கள்..! பள்ளி வளாகத்தில் நிகழ்ந்த கொடூரம்..!

டெல்லி வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 45 ஆக இருந்து வந்த நிலையில் இன்று மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து பலி எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளது. வன்முறை சம்பவத்தில் இதுவரை 903 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது டெல்லியில் படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. கடந்த 4 நாட்களில் பெரியதாக அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை. வன்முறை நிகழ்ந்த பகுதிகள் அனைத்தும் போலீசாரின் முழுக்கட்டுப்பாட்டில் தற்போது இருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!