இந்தியா மேல கைவைக்க ஒரு முறை அல்ல 100 முறை யோசிக்க வேண்டும்..!! பாகிஸ்தானை எச்சரித்த பாதுகாப்புத்துறை அமைச்சர்

By Ezhilarasan BabuFirst Published Feb 29, 2020, 5:41 PM IST
Highlights

 இந்தியாவுக்கு எதிராக எந்த வகையான தாக்குதல் நடத்த  பாகிஸ்தான் முயன்றாலும் ஒன்றுக்கு நூறு முறை  யோசித்தாக வேண்டுமென்றார்.  

இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த ஒருமுறை அல்ல 100 முறைக்கு மேல் பாகிஸ்தான் யோசிக்க வேண்டியிருக்கும் என இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார் . இந்தியாவின் பதிலடி ஈடு கொடுக்க முடியாத அளவிற்கு இருக்கும் என பாகிஸ்தானுக்கு இந்தியா பலமுறை நிரூபித்துள்ளது என அவர் கூறியுள்ளார் .  போர் மற்றும் அமைதிச் சூழலில் வான்படையின் வலிமை என்ற தலைப்பில் தலைநகர் டெல்லியில் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது .  அதில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.அப்போது பேசிய அவர் , 

இந்தியாவில் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலாக  இருந்தாலும் அதற்கு  சரியான முறையில் பதிலடி கொடுக்கும் முதிர்ச்சியும்  பொறுப்பும் இந்தியாவிடம் உள்ளது என்றார்.  புல்வாமா தாக்குதலுக்கு நாம் அளித்த பால்கோர்ட் பதிலடி நாட்டின் பாதுகாப்புத் திறன் மற்றும் தற்காத்துக்கொள்ளும் உரிமையின் உறுதிப்பாடு ஆகியவற்றில் வெளிப்படுத்தியது என்றார்.   பால்கோட்டில் செயல்பட்டு வந்த பயங்கரவாத பயிற்சி முகாம்களில் நாம் நடத்திய வான்வழித் தாக்குதல் பாகிஸ்தானில் கோட்பாடுகளை மாற்றி எழுதுவதாக அமைந்தது என்றார்.  அதேபோன்று  உரியில்  பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது நமது படையினர் நடத்திய தாக்குதல் இந்தியா எவ்வளவு வலிமையானது என்பதை பாகிஸ்தானுக்கு உணர்த்தியுள்ளது என்றார் .  

அதேபோல் எல்லையை மலிவு விலையில் பயங்கரவாதிகள் புகலிடமாக பயன்படுத்த முடியாது என்பதை இந்தியா பலமுறை தெரிவித்துள்ளதுடன் ,  இந்தியாவுக்கு எதிராக எந்த வகையான தாக்குதல் நடத்த  பாகிஸ்தான் முயன்றாலும் ஒன்றுக்கு நூறு முறை  யோசித்தாக வேண்டுமென்றார்.  பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் உலகநாடுகள் இந்தியாவோடு தோளோடு  தோள்க நிற்கிறது என்றார். அதேபோல் சர்வதேச நிதி நடவடிக்கை சிறப்பு குழு பாகிஸ்தானுக்கு வலுவான எச்சரிக்கை விடுத்துள்ளது . இதன்மூலம் பயங்கரவாதிகளின் கதாநாயகர்களாக சித்தரிக்கப்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சையது போன்றவர்களை சிறையில் அடைக்கும் நிர்பந்தம் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ளது இதுவே தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி என்றார். 
 

click me!