பணத்தட்டுப்பாட்டால் அரங்கேறிய பணமில்லா திருமணம் : டெபிட் கார்டு மூலம் மொய் பணம் வசூல்!

First Published Dec 18, 2016, 2:37 PM IST
Highlights


நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில், குஜராத் மாநிலத்தில் வித்தியாசமாக நடந்தேறிய பணமில்லா திருமணம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

நமது நாட்டில் திருமணம் என்றாலே அதிகம் பணம் செலவு செய்து, வரவேற்பு, விருந்து, ஆடல், பாடல் என கோலாகலமாக நடைபெறும். இவ்வாறு நடைபெறும் திருமணத்தில், மணமக்‍களுக்‍கு உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் பரிசுப் பொருட்கள் மற்றும் மொய்யாக பணம் வழங்குவது வழக்‍கம். ஆனால், தற்போது பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்‍கப்பட்டதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இதனால், திருமணத்தை நடத்துவதற்குக்‍ கூட போதிய பணம் கிடைக்‍காமல் மக்‍கள் திணறி வருகின்றனர். இந்த சூழ்நிலையில், குஜராத் மாநிலம் சூரத்தில் வித்தியாசமாக பணமில்லா திருமணம் நடந்தேறியுள்ளது. இத்திருமணத்திற்கு வந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து மொய் பணம் காசோலையாகவோ அல்லது டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலமாகவோ பெறப்பட்டது. மின்னணு பணப்பரிவர்த்தனையை மத்திய அரசு ஊக்‍குவித்து வரும் நிலையில், பணமில்லாமல் நடந்த இந்த திருமணம், பல்வேறு தரப்பினரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

click me!