Death Threat for PM Modi : மும்பை போலீசாருக்கு இன்று வந்த ஒரு மர்ம அழைப்பில், பிரதமர் மோடி மற்றும் முதல்வர் யோகி உள்ளிட்டவரை கொல்ல சதித்திட்டம் தீட்டி உள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளார் ஒரு மர்ம நபர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இரவு மும்பை போலீசாரின் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த ஒரு தொலைபேசி அழைப்பில் பேசிய மர்ம நபர், பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களையும் உத்தர பிரதேச முதல்வர் யோகி யோகி ஆதித்யநாத் அவர்களையும் கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடி மற்றும் முதல்வர் யோகி உள்ளிட்டவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த அந்த நபர் மும்பையில் உள்ள பிரபல ஜேஜே மருத்துவமனையையும் குண்டு வைத்து தகர்க்க போவதாக அந்த தொலைபேசி அழைப்பில் மிரட்டியுள்ளார். உடனடியாக அந்த மர்ம நபரின் அலைபேசி எண்ணை கொண்டு அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட தொடங்கினர்.
உத்தரகாண்ட் சுரங்க விபத்து: பிரதமர் மோடி நேற்றிரவு ஆலோசனை!
இந்நிலையில் மும்பையின் சீயோன் பகுதியில் பதுங்கி இருந்த கம்ரான் கான் என்கின்ற அந்த நபர் கைது செய்யப்பட்டார். மும்பை நகரின் ஆசாத் மைதன் போலீசார் அந்த நபரின் மீது தற்பொழுது செக்ஷன் 505(1)ன் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த கைதான நபரின் இருப்பிடம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
முதல் முறையல்ல
இது பிரதமர் மோடியை கொல்லப் போவதாக வந்த முதல் கொலை மிரட்டல் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூலை மாதம் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கோரக்பூரில் போலீசாரால் பிரதமர் மோடிக்கு மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்ததை அடுத்து கைது
செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போது கைதான அந்த நபரின் பெயர் அருண்குமார் என்றும் அவர் புஜ்ஜவுளி காலணியில் தங்கி இருப்பதாகவும் அதன் பிறகு விசாரணையில் தெரியவந்தது. பிரதமருக்கு கொலை மிரட்டல் வந்த ஒரு சில நிமிடங்களிலேயே அந்த அழைப்பு வந்த மொபைல் எண்ணை ட்ராக் செய்து அந்த குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
இது போல கடந்த ஏப்ரல் மாதம் ஒரு கடிதம் ஒன்று வந்தது, அதில் இன்னும் இரண்டு நாட்களில் கேரளா வர உள்ள பிரதமர் மோடி அவர்களை கொல்ல திட்டமிட்டுள்ளதாக, திருவனந்தபுரத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநில அலுவலகத்திற்கு அந்த வந்தது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
ராஜஸ்தானில் பிரதமர் மோடியின் பிரம்மாண்ட ரோடு ஷோ! மலர் தூவி உற்சாக வரவேற்பு!
அதே மாதம் 112 என்கின்ற அவசர எண்ணிற்கு இரவு 10.22 மணிக்கு வந்த அழைப்பில், உபி முதல்வர் யோகி அவர்களுக்கும் ஒரு கொலை மிரட்டல் வந்தது. அந்த கொலை மிரட்டலில் "நான் விரைவில் முதல்வர் யோகியை கொன்று விடுவேன்" என்று அந்த மர்ம நபர் கூறியது குறிப்பிடத்தக்கது. இப்படி மிரட்டல் விடுத்த அனைவரும் கைது செய்யப்பட்டு அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உரிய விசாரணைகள் நடந்து வருவது நினைவுகூரத்தக்கது.