மாமியாரை வாணலியை வைத்து அடித்து கொன்ற மருமகள்.. பதற வைக்கும் கொலை சம்பவம்..

By Ramya s  |  First Published May 10, 2023, 1:36 PM IST

டெல்லியில் மருமகள் ஒருவர் தனது மாமியாரை வாணலியை வைத்து அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தெற்கு டெல்லியின் நெப் சராய் பகுதியில் 48 வயதான பெண் ஒருவர் தனது மாமியாரை வாணலியால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சுர்ஜித் சோம் (51), அவரது மனைவி சர்மிஷ்தா சோம் (48) மற்றும் அவர்களது 16 வயது மகள் 2014 ஆம் ஆண்டு முதல் அவருடன் நெப் சராய் பகுதியில் உள்ள ஸ்வஸ்திக் ரெசிடென்சியில் வசித்து வருகின்றனர்.

சுர்ஜித் கொல்கத்தாவை சேர்ந்தவர். அவரின் தாயார் ஹாசி சோம் கடந்த ஆண்டு தாயார் மார்ச் 2022 வரை மேற்கு வங்க தலைநகரில் தனியாக வசித்து வந்தார். அதன் பின்னர் அவரை டெல்லிக்கு அழைத்து வந்து தனது வீட்டின் முன் வீட்டை வாடகைக்கு எடுத்து தனது தாயாரை தங்க வைத்துள்ளார். 

Tap to resize

Latest Videos

இந்நிலையில் கடந்த 28-ம் தேதி, ஹாசி சோம் முகம் மற்றூம் தலையில் ஏற்பட்ட காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து  போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். தனது தாயார் நீண்ட நாட்களாக மூட்டுவலியால் அவதிப்பட்டு வருவதாகவும், நடப்பதில் சிக்கல் இருப்பதாகவும் சுர்ஜித் போலீசாரிடம் தெரிவித்தார்.

இதையும் படிங்க : சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்ட நபரால் பெண் மருத்துவர் கொடூர கொலை.. கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்..

ஹாசி இருந்த படுக்கையறையில் ஒரு சிசிடிவி கேமரா கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் அதில் சேமிப்பு சாதனம் இல்லை. ஆனாலும், அது கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். சுர்ஜித், தனது தாயின் அன்றாட நடவடிக்கைகளை கண்காணித்து வருவதால், தனது தொலைபேசியில் உள்ள கேமராவில் இருந்து நேரடி தொடர்பை வைத்திருப்பதாக கூறினார். மேலும் சம்பவத்தன்று மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கேமரா வேலை செய்யவில்லை என்றும் போலீசாரிடம் தெரிவித்தார்.

ஆரம்பத்தில், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் எந்த தவறும் செய்ததாக சந்தேகிக்கவில்லை. பின்னர் ஹாசியின் உடல் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு ஏப்ரல் 29 அன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

பிரேத பரிசோதனையின் போது, சாதாரணமாக கீழே விழுந்தால் இதுபோன்ற காயங்கள் ஏற்படாது என்றும், விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் மருத்துவர் குறிப்பிட்டிருந்தார் என்று துணை போலீஸ் கமிஷனர் (தெற்கு) சந்தன் சவுத்ரி தெரிவித்தார்.

சுர்ஜித்தின் மகள் கூறுகையில், தனது தாய்க்கும் பாட்டிக்கும் இடையே நல்லுறவு இல்லை. இதை சுர்ஜித்தும் உறுதி செய்ததாக போலீசார் தெரிவித்தனர். சம்பவத்தன்று சர்மிஷ்தா மட்டும் அந்த குடியிருப்பில் இருந்துள்ளார்.

பின்னர், சுர்ஜித் போலீசாரை அழைப்பதற்கு முன்பு தனது தாயாரின் படுக்கையறையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவின் மெமரி கார்டை எடுத்ததாக வாக்குமூலம் அளித்ததாக சந்தன் சவுத்ரி தெரிவித்தார்.

ஏப்ரல் 28 ஆம் தேதி காலை 10:30 மணியளவில், சர்மிஷ்தா ஒரு வாணலியுடன் ஹாசி சோமின் குடியிருப்பில் நுழைந்தது சிசிடிவி காட்சிகளில் தெரியவந்துள்ளது. சுர்ஜித் தனது தாயாரின் இறுதிச் சடங்குகளுக்குப் பிறகு மெமரி கார்டை தன்னிடம் வைத்துக்கொண்டு காட்சிகளைப் பார்த்தார். சிசிடிவி காட்சிகளில், அவர் தனது தாயின் பிளாட்டுக்குள் தனது மனைவி நுழைந்து சிறிது நேரம் கழித்து வெளியேறுவதைக் கண்டார். அவர் தனது அச்சத்தை காவல்துறையினரிடம் பகிர்ந்து கொண்டார் என்று காவல்துறை அதிகாரி கூறினார்.

பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, உடல் முழுவதும் 14 காயங்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து விசாரணை, சுர்ஜித்தின் சாட்சியம், சிசிடிவி காட்சிகள் மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில், ஐபிசி பிரிவு 302 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சர்மிஷ்தாவை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்திற்கான காரணத்தை தங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று பொலிசார் தெரிவித்தனர், ஆனால் வயதான நபரை கவனித்துக்கொள்வதில் ஏற்படும் நீண்டகால விரக்தியால் அவர் இந்த கொலையை செய்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : Karnataka Elections: கர்நாடகாவில் வாக்களிக்க வந்த 2 பேர் மாரடைப்பால் மரணம்

click me!