குஜராத் மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: பிபோர்ஜாய் புயல் ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவுறுத்தல்

Published : Jun 13, 2023, 07:55 AM ISTUpdated : Jun 13, 2023, 08:33 AM IST
குஜராத் மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: பிபோர்ஜாய் புயல் ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவுறுத்தல்

சுருக்கம்

பிபோர்ஜாய் புயல் பாதிப்பு அதிகம் இருக்கக்கூடிய இடங்களில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பாக உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

பிபோர்ஜாய் புயல் வரும் வியாழக்கிழமை குஜராத்தில் கரையைக் கடக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை மத்திய அமைப்புகள் மற்றும் குஜராத் அரசு பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். அப்போது, புயல் பாதிப்பு அதிகம் இருக்கக்கூடிய இடங்களில் உள்ள மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பிபோர்ஜாய் புயல் ஜூன் 15ஆம் தேதி (வியாழக்கிழமை) நண்பகலில் குஜராத் மாநிலத்தின் ஜகாவ் துறைமுகம் அருகே மாண்ட்வி மற்றும் கராச்சி (பாகிஸ்தான்) இடையே கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிகக் கடுமையான சூறாவளி புயலான பிபோர்ஜாய் கரையைக் கடக்கும்போது மணிக்கு 125-135 கிமீ வேகத்தில் காற்று வீசும். அதிகபட்சமாக காற்றின் வேகம் மணிக்கு 145 கிமீ வேகத்தில் வீசக்கூடும் எனவும் வானிலை மையம் சொல்லி இருக்கிறது.

இன்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்; என்ன சொல்லப் போகிறார் ஈபிஎஸ்?

இந்த புயல் காரணமாக குஜராத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழையை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. கட்ச், தேவபூமி துவாரகா, ஜாம்நகர் ஆகிய பகுதிகளில் மிகக் கனமழையும், போர்பந்தர், ராஜ்கோட், மோர்பி, ஜூனாகத் சில பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் திங்கட்கிழமை நடைபெற்ற சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தில் பிபோர்ஜாய் புயலை எதிர்கொள்வதற்கான ஆயத்தப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும், மாநில அரசு சார்பில் சம்பந்தப்பட்ட துறைகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

பொய் வழக்கில் தூக்கிச் சென்று டார்ச்சர் செய்த போலிஸ்! விரக்தி அடைந்த மாணவரின் விபரீதச் செயல்!

அப்போது மின்சாரம், தொலைத்தொடர்பு, சுகாதாரம், குடிநீர் போன்ற அத்தியாவசிய தேவைகள் இடைவிடாது கிடைப்பதை உறுதி செய்யுமாறு பிரதமர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். விலங்குகளின் பாதுகாப்பையும் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். புயலால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ள இடங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பிரதமர் மோடி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையில், தேசிய பேரிடர் மீட்புப் படையின் 12 குழுக்கள் முன்கூட்டியே குஜராத் சென்றுள்ளன. மீட்புப் படகுகள், மரம் வெட்டும் கருவிகள், தொலைத்தொடர்பு சாதனங்கள் உள்ளிட்ட பேரிடர் மீட்பு உபகரணங்களுடன் பேரிடர் மீட்புப் படை குஜராத்தை அடைந்துள்ளது. மேலும் 15 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. கடலோர காவல்படை மற்றும் கடற்படைக்குச் சொந்தமான கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்களும் தயாராக உள்ளன. இந்திய விமானப்படையும் மீட்புப் பணியில் ஈடுபட ஆயத்தமாக உள்ளது.

போராடி கணவரை ஜாமீனில் மீட்ட மனைவி! வெளியே வந்த 15 நாளில் சந்தேகப்பட்டு சுட்டுக்கொன்ற கணவர்!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

திருவனந்தபுரம் மேயரானார் பிஜேபியின் வி.வி. ராஜேஷ்! 40 ஆண்டுகால இடதுசாரி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி!
Mumbai Pigeon: புறாவுக்கு உணவு அளித்தது பாவம்.. தொழிலதிபருக்கு ரூ.5,000 அபராதம் விதித்த நீதிமன்றம்!