
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடனை திருப்பிச் செலுத்த தாமதமான வாடிக்கையாளரிடம் உன் பொண்டாட்டிய வித்தாவது கடனை அடைங்கப்பா என மிக மோசமாக பேசி நடந்து கொண்டதாக தனியார் வங்கி ஊழியர் ஒருவர் மீது கோலாப்பூர் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை.
மகாராஷ்டிராவில் உள்ள ஆர்பிஎல் வங்கியில் கிரெடிட் கார்டு மூலம் கடன் பெற்ற ஒருவர், அக்கடனை திருப்பிச் செலுத்த சற்று தாமதமாகியுள்ளது. இதையடுத்து அந்த பணத்தை சரியாக செலுத்தாத வாடிக்கையாளரிடம் தொலைபேசியில் பேசும்போது ஆர்பிஎல் வங்கியின் மும்பை ஊழியர் தவறான மொழியைப் பயன்படுத்தியுள்ளார்.
''பெரிய அளவில் வாங்கிய கடன்தொகையை செலுத்த முடியவில்லை யென்றால், தங்கள் குடும்பத்தில் உள்ள பெண்களை விற்க வேண்டும். விற்று அப்பணத்தைச் செலுத்தலாம். அவரது பெயர் வெளியிடப்படமாட்டாது என்று பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இவ்வாறு வாடிக்கையாளரிடம் மிகத் தவறாக பேசியதால் வங்கி ஊழியர்மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. உள்ளூர் செய்தி தொலைக்காட்சிகள் இவ்வுரையாடலை வெளியிடப்பட்டதை அடுத்து போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
வாங்கிய கடனுக்காக தவணையை கட்டத் தவறிய வாடிக்கையாளரிடம் பணத்தை வசூல் செய்தாக வேண்டிய வங்கியின் பொறுப்பு எனினும் நிர்வாகம் அறிவுறுத்தலின்பேரில் செயல்பட்ட வங்கி ஊழியருக்கு ''எந்த எல்லை அளவு பேச வேண்டும் என்பதுகூட அவருக்குத் தெரியாதா?'' என்று சமூக வலைதளங்களில் கேள்வி மேல் கேள்வி கேட்டு பொது மக்கள் குடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து வங்கி வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், தொலைபேசியில் பயன்படுத்தப்பட்ட மொழியை ஏற்றுக்கொள்ளமுடியாது. அப்படி பேசியது கண்டிக்கத்தது.
எங்கள் சார்பாக அத்தகைய மொழியைப் பயன்படுத்துவதை நாங்கள் அங்கீகரிக்கவில்லை. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. உரிய நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும்'' என்று கூறப்பட்டுள்ளது