
அசாம் மாநிலத்தில் உள்ள ஜோர்காட் எனும் பகுதியில் ஒரு எம்.எல்.ஏ செய்திருக்கும் நற்செயல் அப்பகுதி மக்களை நெகிழச் செய்திருக்கிறது. ஜோர்காட் பகுதியி வசித்து வந்த திலீப் டே(50) என்ற நபர், உடல் நிலை சரி இல்லாமல் இருந்திருக்கிறார். அந்த உடல் நலக்குறைவால் திடீரென மரண்மடைந்திருக்கிறார். திலீப் டே-க்கு என உறவினர்கள் அதிகம் கிடையாது.
ஒரே ஒரு உடல் ஊனமுற்ற நபர் மட்டுமே அவருக்கு துணையாக இருந்திருக்கிறார். இதனால் திலீப்பின் இறுதி சடங்கை எப்படி நடத்துவது? என வழி தெரியாமல் திகைத்திருக்கிறார் அவரின் உறவினர். அப்போது அக்கம் பக்கத்தில் உள்ள மக்கள் அவருக்கு உதவ முன் வந்திருக்கின்றனர்.
இதில் திலீபின் பக்கத்து வீட்டில் வசிக்கும் அந்த தொகுதி எம்.எல்.ஏவும் ஒருவர். எம்.எல்.ஏவான ரூப்ஜோதி குர்மி எனும் அவருக்கு இந்த தகவல் கிடைத்ததும், உடனே திலீபின் வீட்டிற்கு விரைந்து சென்றிருக்கிறார்.
அதன் பிறகு அங்கிருந்த திலீபின் உறவினர்களுடன் இணைந்து, திலீபின் இறுதி சடங்குகளை நல்ல முறையில் நடத்தி கொடுத்திருக்கிறார். மேலும் திலீபின் உடலை சுடு காடு வரை சுமந்தும் சென்றிருக்கிறார் ரூப்ஜோதி. ஒரு எம்.எல்.ஏ-வாக சக மனிதரின் மரணத்தின் போது, மனிதநேயத்துடன் இவர் நடந்து கொண்ட விதம், அப்பகுதி மக்களை நெகிழ் செய்திருக்கிறது