வாட்ஸ்அப்புக்கு போட்டியாக பதஞ்சலியின் டுபாக்கூர் ஆப்-ஐ... ஈயடிச்சான் காப்பி அடித்ததால்... கூகிள்-லே வெளியேற்றிய கொடுமை....

First Published Jun 1, 2018, 6:10 PM IST
Highlights
Ramdev Kimbho app taken down from Google Play Store


வாட்ஸ்ஆப்பிற்குப் போட்டியாக பதஞ்சலி நிறுவனத்தின் புதியதாக வெளியிட்ட கிம்போ ஆப்-ஐ நேற்று பிரமாண்ட விழா ஏற்பாடு செய்து வெளியிட்டனர். இந்த ஆப். ப்ளே ஸ்டோரிலிருந்து அதை சுமார் 1.5 லட்சம் பேர் பதிவிறக்கமும் செய்தனர். ஆனால், போலோ என்ற பெயரில் வெளியாகி, தகவல் திருட்டு காரணமாக ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்ட ஒரு செயலியின் வெறும் ஜெராக்ஸ் தானாம். இந்த நிலையில், ப்ளே ஸ்டோரிலிருந்து கிம்போ செயலியும் காணாமல் போய்விட்டது.

போலோ ஆப்பிளிருந்து ஜெராக்ஸ் அடித்து எடுக்கப்பட்ட டுபாக்கூர் ஆப் ஆன “Kimbo App” “கூகுள் பிளே” ஸ்டோரில் நேற்று கிம்போ வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே, 1.5 லட்சம் பேர் டவுன்லோட் செய்திருந்தனர். ஆனால், அந்த மெசேஜ் பயனாளர்கள் தகவல்களை சேகரித்து பொது வெளிக்கு கொடுக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் தொழில்நுட்ப குழு வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். 

எதனால் நீக்கினார்கள்? ஆமாம் அமெரிக்க நிறுவனத்தின் தயாரிப்பான போலோ என்ற பெயரில் ஏற்கனவே வெளியாகி தகவல் திருட்டு காரணமாக கூகுள் பிளே நீக்கம் செய்த ஒரு ஆப்’பின் காப்பி தான். கிம்போவாம், இந்த கிம்போ ஆப் டவுன்லோட் செய்ததும், செல்போனுக்கு வரும் OTPயில் கூட போலோ என்றுதான் வந்துள்ளது.

கிம்போ உருவாக்கிய டெக்னாலஜி டீம் ஜீனியஸ் இவ்வளவு மகா மட்டமாக ஈயடிச்சான் காப்பி அடித்துள்ளார்கள். இதனால், அதிர்ச்சியடைந்தனர் பயனாளிகள். ஏற்கனவே இதனால் கிம்போ ஆப் சிலமணி நேரத்தில் பிளே ஸ்டோரில் இருந்து  டெலிட் செய்யப்பட்டது.

ஆனால், மீண்டும் மாற்றம் செய்து கிம்போ வெளியிடப்படும் என பதஞ்சலி நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

click me!