உத்தரகாண்ட் மாநிலம், ஜோஷிமத் நகரில் நிலச்சரிவு ஏற்பட்டு ஏராளமான வீடுகளில் விரிசல் ஏற்பட்ட நிலையில், கர்னபிரயாக் நகரிலும் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.
உத்தரகாண்ட் மாநிலம், ஜோஷிமத் நகரில் நிலச்சரிவு ஏற்பட்டு ஏராளமான வீடுகளில் விரிசல் ஏற்பட்ட நிலையில், கர்னபிரயாக் நகரிலும் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.
புவியியல் ஆய்வாளர்கள் கூற்றுப்படி ஜோஷிமத் நகரம் வரும் காலத்தில் முழுமையாக மண்ணில் புதையும் ஆபத்து உள்ளதாகக் எச்சரிக்கின்றனர். ஜோஷமித் நகர மக்கள் ஏற்கெனவே பீதியில் இருக்கும் நிலையில் இப்போது கர்னபிரயாக் நகர மக்களும் கதிகலங்கியுள்ளனர்.
போதையில் சக பயணி மீது சிறுநீர் கழித்த ஊழியர்.. வேலையில் இருந்து அதிரடி நீக்கம் !
உத்தரகாண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் ரிஷிகேஷ் பத்ரிநாத் செல்லும் வழியில் இமயமலை அடிவாரத்தில் ஜோஷிமத் நகரம் அமைந்துள்ளது. தவுலிங்கா, அலக்நந்தா ஆகிய இரு நதிகளும் ஜோஷிமத் நகரில் சங்கமித்து செல்கின்றன. இந்த நகரைச் சுற்றி ஏராளமான சுற்றுலாத் தளங்கள் இருப்பதால், ரிஷிகேஷ் , பத்ரிநாத் செல்பவர்கள் இங்கு தங்கி செல்கிறார்கள்.
இந்த ஜோஷிமத் நகரில் ஏறக்குறைய 20ஆயிரம் பேர் வசித்து வருகிறார்கள்.ஆனால், அழகு இருக்கும் இதேநகரில் அதிக ஆபத்தும் இருக்கிறது. இந்த நகரில் அடிக்கடி நிலச்சரிவு, பூகம்பம் ஏற்படும் பகுதியாக புவியியல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
ரயில் பயணியை வெறித்தனமாக தாக்கிய டிக்கெட் பரிசோதகர்கள்.. அதிர்ச்சி வீடியோ வெளியானது !
இந்நிலையில் ஜோஷிமத் நகரில் கடந்த சில நாட்களாக திடீரென நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன, அதைத் தொடர்ந்து ஏராளமான வீடுகளில் விரிசலும் ஏற்பட்டுள்ளன. பல வீடுகள் திடீரென மண்ணில் புதைந்துள்ளன. இதனால் 3 ஆயிரத்தும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் வீடுகளில் குடியிருக்க அச்சப்பட்டு சாலைகளிலும், தெருக்களிலும் தஞ்சமடைந்துள்ளனர்.
ஆனால், புவியியல் வல்லுநர்கள் எச்சரிக்கையின்படி “ நிலநடுக்கம், நிலச்சரிவு ஏற்படும் ஆபத்து அதிகம் இருக்கும் பகுதியாக ஜோஷிமத் இருப்பதால், நிலச்சரிவில் அழியும் ஆபத்து இருப்பதாக” தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஜோஷிமத் நகரைத் தொடர்ந்து கர்னபிரயாக் நகரிலும் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
இதையடுத்து, புவியியல் வல்லுநர்கள் குழு, கர்வால் நகர ஆணையாளர் சுஷில் குமார், பேரிடர் மேலாண்மை செயலாளர் ரஞ்சித் குமார் சின்ஹா ஆகியோர் ஜோஷிமத், கர்னபிரயாக் பகுதியில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்பகுதியில் உள்ள மண்ணின் தன்மை, புவி அமைப்பு ஆகியவற்றை ஆய்வு செய்து வருகின்றனர்.
எல்ஜிபிடி: ஒரேபாலின திருமண அனுமதி கோரும் மனு!மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
ஜோஷிமத், கர்னபிரயாக் பகுதியில் உள்ள மனோகர் பாக், சிங்தார், ஜேபி, மர்வாரி, சுனில் கோன், விஷ்னு பிரயாக், ரவிகிராம், காந்திநகர் பகுதியில் ஆய்வாளர்கள் வீட்டுக்கு வீடு சென்று ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
கர்னபிரயாக் நகரம் கடல்மட்டத்தில் இருந்து 860 மீட்டர் உயரத்திலும், ஜோஷிமத் நகரம் 1890 மீட்டர் உயரத்திலும் உள்ளனர். ஜோஷிமத் நகரில் இருந்து கர்னபிரயாக் நகருக்கும் இடையே 80கி.மீ தொலைவு இருக்கிறது. இருப்பினும் ஜோஷிமத் நகரில் ஏற்பட்டநிலச்சரிவு கர்னபிரயாக் வரை பாதித்துள்ளது.
கர்னபிரயாக் அருகே இருக்கும் பகுனாநகர், சிஎம்பி பந்த், சப்சி மண்டி ஆகிய பகுதி மக்களும் வீடுகளில் விரிசல் ஏற்படுவதைப் பார்த்து அச்சமடைந்துள்ளனர். பங்கஜ் திம்ரி, உமேஷ் ரத்ரி, பிபிசதி, ராகேஷ் கந்தூரி, ஹரேந்திர பிசித், ரவிதுத் சதி, தவான் சிங், திகம்பர் சிங், கப்பார் சிங் ஆகியபகுதிகளில் உள்ள வீடுகளிலும் விரிசல் விடத் தொடங்கியுள்ளன.
இதையடுத்து, மத்திய அரசு சார்பில் மத்திய சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சகம், மத்திய நீர் ஆணையம், இந்திய புவிவியல் வல்லுநர்கள் குழு, தேசிய சுத்த கங்கைத் திட்டம் ஆகியவற்றில் இருந்து விரைவுக்குழுவினர் ஜோஷமிமத், கர்னபிரயாக் பகுதிக்கு விரைந்துள்ளனர்