அந்தமான் நிக்கோபார் தீவுகளை அடைந்தது பிரிட்டிஷ் கடற்படை போர்க்கப்பல்… இந்திய கடற்படையுடன் பயிற்சி!!

By Narendran SFirst Published Jan 6, 2023, 10:56 PM IST
Highlights

ராயல் நேவியின் போர்க்கப்பலான எச்.எம்.எஸ் டாமர் இந்திய கடற்படையுடன் கூட்டுப் பயிற்சிக்காக அந்தமான் நிக்கோபார் தீவுகளை சென்றடைந்தது. அடுத்த ஐந்து நாட்களுக்கு, எச்.எம்.எஸ் டமர் மற்றும் அதன் குழு உறுப்பினர்கள் இந்திய கடற்படையுடன் இணைந்து பயிற்சிகளை மேற்கொள்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது. 

ராயல் நேவியின் போர்க்கப்பலான எச்.எம்.எஸ் டாமர் இந்திய கடற்படையுடன் கூட்டுப் பயிற்சிக்காக அந்தமான் நிக்கோபார் தீவுகளை சென்றடைந்தது. அடுத்த ஐந்து நாட்களுக்கு, எச்.எம்.எஸ் டாமர் மற்றும் அதன் குழு உறுப்பினர்கள் இந்திய கடற்படையுடன் இணைந்து பயிற்சிகளை மேற்கொள்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் ராயல் நேவியின் கடல் ரோந்துக் கப்பல் எச்.எம்.எஸ் டமார் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை அடைந்துள்ளது. இந்த போர்க்கப்பல் இந்திய பசிபிக் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் இருந்து புறப்பட்ட போர்க்கப்பல் முதன்முறையாக இந்திய துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து நாட்களுக்கு, எச்.எம்.எஸ் டமர் மற்றும் அதன் குழு உறுப்பினர்கள் இந்திய கடற்படையுடன் இணைந்து பயிற்சிகளை மேற்கொள்வார்கள். இந்திய பசிபிக் பகுதியில் பிரிட்டனால் நிறுத்தப்பட்டுள்ள இரண்டு கப்பல்களில் இந்தப் போர்க்கப்பலும் ஒன்று. 

இதையும் படிங்க: போதையில் சக பயணி மீது சிறுநீர் கழித்த ஊழியர்.. வேலையில் இருந்து அதிரடி நீக்கம் !

இதுக்குறித்து அந்த கப்பலின் மூத்த அதிகாரி அட்மிரல் சர் பென் கீ கூறுகையில், இந்த வாரம் எச்எம்எஸ் தாமர் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்குச் செல்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்திய கடற்படையில் பயிற்சி செய்வதற்கான வாய்ப்பு மிகவும் முக்கியமானது. இந்திய கடற்படையுடனான உறவுகளுக்கு ராயல் நேவி முக்கியத்துவம் அளிக்கிறது. இந்தோ-பசிபிக் பகுதியில் உள்ளவர்களுடன் எச்.எம்.எஸ் தமர் மற்றும் அவரது குழுவினர் செய்து வரும் பணி மிகவும் முக்கியமானது. உலகளாவிய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு இந்திய கடற்படையுடனான உறவுக்கு ராயல் நேவி அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. 

இதையும் படிங்க: மத்திய அரசில் வேலைவாய்ப்பு... விண்ணப்பிப்பது எப்படி? சம்பளம் எவ்வளவு? விவரம் உள்ளே!!

இதுக்குறித்து இந்தியாவுக்கான பிரிட்டன் நாட்டின் தற்காலிக உயர் கமிஷனரான கிறிஸ்டினா ஸ்காட் கூறுகையில், எச்.எம்.எஸ் டமாரின் வருகை, இங்கிலாந்தின் இந்தோ-பசிபிக் உறவை உறுதி செய்கிறது. இந்தியாவுடனான பாதுகாப்பு உறவுகளுக்கு இங்கிலாந்து அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. இந்தோ-பசிபிக், உலகத்திற்கான எதிர்கால வளர்ச்சி மற்றும் செழிப்பை உயர்த்தும் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும் இது வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு ஆகியற்றிற்கு உகந்ததாக இருக்கும் என்றார்.

click me!