போதையில் சக பயணி மீது சிறுநீர் கழித்த ஊழியர்.. வேலையில் இருந்து அதிரடி நீக்கம் !

By Raghupati RFirst Published Jan 6, 2023, 9:50 PM IST
Highlights

ஏர் இந்தியா விமானத்தில் பெண் சக பயணி மீது சிறுநீர் கழித்ததாக குற்றம் சாட்டப்பட்ட வெல்ஸ் பார்கோ ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து கடந்த ஆண்டு நவம்பர் 26-ம் தேதி டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் பயணித்தது. இந்த விமானத்தில் 'பிசினஸ்' வகுப்பில் வயதான பெண் பயணித்தார். இரவில் விமானத்தில் விளக்கு அணைக்கப்பட்ட பின்னர், பிசினஸ் வகுப்பில் மற்றொரு இருக்கையில் பயணித்த சங்கர் மிஸ்ரா என்ற நபர் மதுபோதையில் அந்த பெண் மீது சிறுநீர் கழித்தார். 

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் அந்த விமான நிறுவன ஊழியர்களிடம் புகார் அளித்தபோதும் பணியில் இருந்த ஏர் இந்தியா பிரச்சினையை சரிசெய்வதிலேயே குறியாக இருந்துள்ளனர். இந்த செயலில் ஈடுபட்ட சங்கர் மிஸ்ரா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த அந்த பெண் டெல்லிக்கு வந்த பின் ஆன்லைன் மூலம் தனது அதிருப்தி மற்றும் புகாரை ஏர் இந்தியா தலைமைக்கு அனுப்பியுள்ளார்.

இதையும் படிங்க..ஜில்லா முதல்வர்.. மெயின்ரோடு புகழ்.! கண்ட்ரோல் இல்லாதவர்கள் - ஜெயக்குமாருக்கு சவால் விட்ட செந்தில் பாலாஜி!

ஆனாலும், சரிவர நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் இந்த விவகாரம் கடந்த சில நாட்களுக்கு முன் வெளிச்சத்திற்கு வந்தது. இந்த நிலையில் சிறுநீர் கழித்ததாக குற்றம் சாட்டப்பட்ட வெல்ஸ் பார்கோ ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டார் என்று நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..11 நாட்கள்.. 13,560 கிமீ தூரம்.. உணவின்றி பறந்து கின்னஸ் சாதனை செய்த பறவை - எங்கு தெரியுமா?

click me!