
பசு மாட்டின் கொம்புக்கு அணுக் கதிர்வீச்சை தடுக்கும், கவர்ந்து இழுக்கும் தன்மை இருக்கிறது என்று பேஸ்புக்கில் மலையாளம் பேசும் ஒருவர் கூறும்வீடியே வைரலாகப் பரவி வருகிறது.
இதற்கு ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்ற நீதிபதி மகேஷ் சந்திர சர்மா, மயில்கள் இனப்பெருக்கம் செய்வதில்லை, ஆண் மயிலின் கண்ணீரை அருந்தி பெண் மயில் கருவுறும் என்று அறிவியலில் புதிய கண்டுபிடிப்பு செய்து ‘பெரிய குண்டு’போட்டார்.
இந்நிலையில், பேஸ்புக்கில் மலையாளி ஒருவர் பேசும் வீடியோ வௌியாகி பரபரப்பாகி வருகிறது. இவர் கூறும் அறிவியல் விஷயங்கள் கேட்பவர்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது.
அதில் அந்த நபர் வீடியோவில் பேசுகையில், “ பசு மாட்டின் கொம்புக்கு கதிர்வீச்சை தடுக்கும், ஈர்க்கும் சக்தி இருக்கிறது. பசு மாட்டின் கோமியத்தால் புற்றுநோய் முதல் எபோலா வரை அனைத்து விதமான நோய்களும் குணமாகும்’’ என்றார்.
அதிலும், குறிப்பாக மாட்டின் கொம்புகளுக்கு இடையே எப்.எம். ரேடியோவை வைத்து கேட்டால், அதில் பாடல்களையும், நிகழ்ச்சிகளையும் கேட்க முடியாது. ஏனென்றால், காந்த அலைகளை தடுக்கும் சக்தி கொம்புகளுக்கு இருப்பதால், நிகழ்ச்சிகளை கேட்க முடியாது’’ என்கிறார். இவர் கூறியது பேஸ்புக்கில்வைரலாக பரவி வருகிறது.