12 வயதுக்கு மேற்பட்டோருக்கு கோவோவேக்ஸ் தடுப்பூசி.! விரைவில் அறிவிப்பு..!!

By Raghupati R  |  First Published Apr 4, 2022, 10:08 AM IST

கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக திருமணம், இறப்பு உள்ளிட்ட நிகழ்வுகள் உட்பட பல்வேறு செயல்பாடுகளுக்கு தமிழக அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது. 


சிறார்களுக்கு தடுப்பூசி :

இந்த கட்டுப்பாடுகள் மார்ச் 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் மாநிலத்தில் உள்ள 92% மக்களுக்கும், 2வது டோஸ் 75% மக்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்ததையடுத்து, தமிழக பொது சுகாதார துறை சட்டத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை திரும்ப பெற்று சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. 

Latest Videos

undefined

அதில், கொரோனா தொடர்பாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அவசியமில்லை. தடுப்பூசி, முகக்கவசம், தனிமனித இடைவெளி ஆகியவை சுய விருப்பத்தின் அடிப்படையில் பின்பற்ற வேண்டும். தமிழகத்தில் சுய விருப்பத்தின் அடிப்படையில் கொரோனா தடுப்பூசிகளை மக்கள் செலுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நம் நாட்டில், கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. அதன்படி, 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு, 'சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா' நிறுவனத்தின் 'கோவிஷீல்டு' தடுப்பூசியும், 'பாரத் பயோடெக்' நிறுவனத்தின் 'கோவாக்சின்' தடுப்பூசியும் இரண்டு டோஸ்களாக செலுத்தப்பட்டு வருகின்றன.

கோவோவேக்ஸ் - தடுப்பூசி :

இதேபோல் 15 - 18 வயது சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில், 12 - 14 வயது குழந்தைகளுக்கு 'பயாலஜிக்கல் - இ' நிறுவனத்தின், 'கோர்பேவாக்ஸ்' தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவங்கின. இதற்கிடையே சீரம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கோவோவேக்ஸ் தடுப்பூசியை, 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு அவசர காலத்தில் பயன்படுத்த, இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்தது.

இதையடுத்து, தேசிய தடுப்பூசி நடவடிக்கை யின் கீழ் மக்களுக்கு செலுத்தப்படும் தடுப்பூசிகளின் பட்டியலில், கோவோவாக்ஸ் தடுப்பூசியையும் இணைக்கக்கோரி சீரம் நிறுவனம் முறையிட்டது.இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த, என்.டி.ஏ.ஜி.ஐ., எனப்படும், தடுப்பூசி தொடர்பான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் கொரோனாவுக்கான செயல்குழு, சீரம் நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இதையும் படிங்க : கோவேக்சினுக்கு திடீர் தடை.! உலக சுகாதார அமைப்பு போட்ட அதிரடி உத்தரவு.. அச்சச்சோ..?

click me!