nasik rail derailed :மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே குர்லா-ஜெய்நகர் பவன் எக்ஸ்பிரஸ் ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார், ஒருவர் உயிரிழந்தார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே குர்லா-ஜெய்நகர் பவன் எக்ஸ்பிரஸ் ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார், ஒருவர் உயிரிழந்தார்.
நாசிக் நகரிலிருந்து மும்பைக்கு குர்லா-ஜெய்நகர் பவன் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று புறப்பட்டது. லஹாவித்- தியோதாலி ரயில் நிலையங்களுக்கு இடையே எக்ஸ்பிரஸ் ரயில்வந்தபோது திடீரெந ரயிலின் 6 பெட்டிகள் இருப்புப்பாதையைவிட்டு விலகி தடம்புரண்டன. இந்த சம்பவம் பிற்பகல் 3.10 மணிக்கு நடந்தது.
இதையடுத்து, உடனடியாக நாசிக் ரயில்வே நிலையத்துக்கும், ரயில்வே போலீஸாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள்விரைந்துவந்து மீட்புப்பணியி்ல் ஈடுபட்டு வருகின்றனர்.
குர்லா-ஜெய்நகர் பவன் எக்ஸ்பிரஸ் தடம்புரண்டதால், மும்பைக்குச் செல்லும் பாதையில் ரயில் போக்குவரத்தில் எந்தவிதமான பாதிப்பும் இல்லை என ரயி்ல்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டது
நாசிக் மாவட்ட ஆட்சியர் பகவத் தியாபைட் கூறுகையில் “ நாசிக் தாசில்தார், வருவாய் அதிகாரிகள் உடனடியாக விபத்து நடந்த இடத்துக்குச் சென்று மீட்புப்பணியை விரைவாகச் செய்ய உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்தார்.
ரயில்வே சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன
ரயில்வே:55993
எம்டிஎன்எல்: 02222694040
உதவி எண்கள்: 022 67455993