மீண்டும் தடுப்பூசி தட்டுபாடு..? உற்பத்தியை குறைக்க சீரம் முடிவு ஏன்..?

By Thanalakshmi VFirst Published Dec 8, 2021, 10:22 PM IST
Highlights

மத்திய அரசிடமிருந்து புதிய ஆர்டர்கள் ஏதும் வரவில்லையென்பதால் சீரம் தனது தடுப்பூசி உற்பத்தியை குறைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
 

மத்திய அரசிடமிருந்து புதிய ஆர்டர்கள் ஏதும் வரவில்லையென்பதால் சீரம் தனது தடுப்பூசி உற்பத்தியை குறைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மொத்த தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை சுமார் 128 கோடியை தாண்டியுள்ளது. இதில் முதல் டோஸ் தடுப்பூசியை 80 கோடி பேரும், 2 டோஸ் தடுப்பூசியை 48 கோடி பேரும் செலுத்தியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கோவிஷில்டு தடுப்பூசியை இந்தியாவிலுள்ள சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது.

கோவிஷீல்டு தடுப்பூசி உற்பத்தியை அடுத்த வாரம் முதல் 50 % குறைக்க முடிவு செய்திருப்பதாக சீரம் நிறுவனம் அறிவித்திருக்கிறது. இதுக்குறித்து பேசிய சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அதார் பூனாவாலா, தடுப்பூசி தேவையை விட விநியோகம் அதிகமாக இருப்பதால் உற்பத்தியை குறைக்க முடிவு செய்திருப்பதாக கூறியுள்ளார்.  ஏற்கனவே வந்த ஆர்டர்கள் அடுத்த வாரத்துடன் முடிவடையும் நிலையில் மத்திய அரசிடம் இருந்து புதிய ஆர்டர்கள் எதுவும் வராததால் இந்த முடிவு எடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போதுள்ள தடுப்பூசிகள் ஓமிக்ரானுக்கு எதிராக செயல்படாது என ஒதுக்கிவிட முடியாது என்று கூறிய அவர், மீண்டும் அரசு தரப்பில் தடுப்பூசி தேவைப்படும் பட்சத்தில் திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டு விடக்கூடாது என்பதை கவனத்தில் கொண்டு மீதமுள்ள 50 சதவீத தடுப்பூசி உற்பத்தி தொடரும் என தெரிவித்தார். தற்போதைய சூழ்நிலையில் சுமார் 30 மில்லியன் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி இந்தியாவில் போட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த ஆதார் பூனாவாலா மக்களுடைய பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்து கொள்ளக் கூடாது என தெரிவித்தார். 

மேலும் தற்போதைய இரண்டு டோஸ் தடுப்பூசிகள் ஒமைக்ரானுக்கு எதிராக செயல்படாது என்பதை உறுதியாக சொல்ல முடியாது என தெரிவித்த அவர், தற்போதைய தடுப்பூசிகள் 80 சதவீதம் வரை கொரோனா வைரஸ் எதிராக செயல்படக்கூடியது என தெரிவித்தார். மேலும் பேசிய அவர், 500 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளை வெளிநாடுகளில் ஏற்றுமதி செய்வதற்கான பணிகள் நடைபெறுவதாகவும், இதற்காக பல்வேறு ஆப்பிரிக்க தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறினார். 

ஒவ்வொரு மாதமும் கோவிஷீல்டு தடுப்பூசி 250-ல் இருந்து 275 மில்லியன் டோஸ்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இதன் ஆயுட்காலம் 9 மாதங்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!