#BipinRawat இங்கே ஒருத்தர் உயிரோடு இருக்காரு… ஸ்டெரச்சர் கொண்டு வாங்க… ‘திக் திக்' வீடியோ

By manimegalai aFirst Published Dec 8, 2021, 10:02 PM IST
Highlights

பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான தருணத்தில் உயிருடன் விமானி ஒருவர் மீட்கப்பட்ட வீடியோ வெளியாகி இருக்கிறது.

குன்னூர்: பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான தருணத்தில் உயிருடன் விமானி ஒருவர் மீட்கப்பட்ட வீடியோ வெளியாகி இருக்கிறது.

கோவை மாவட்டம் சூலூரில் உள்ள ராணுவ விமானப்படை தளத்தில் இருந்து இன்று 14 பேருடன் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டது. நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் ராணுவ உயரதிகாரிகளுக்கான கூட்டத்தில் பங்கேற்க முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 14 பேர் பயணித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் மலைப்பகுதியில் காட்டேரி என்ற பள்ளத்தாக்குக்கு மேலே ஹெலிகாப்டர் பறந்த போது மோசமான வானிலை நிலவி இருக்கிறது. அதனை தொடர்ந்து, கட்டுப்பாட்டை இழந்து ஹெலிகாப்டர் மரத்தில் மோதி காட்டில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் முதல் கட்டமாக 4 பேர் பலியானதாக தகவல்கள் கசிந்தன. பின்னர் நேரம், நேரம் ஆக ஆக… பலி எண்ணிக்கை உயர தொடங்கியது. மாலை 6 மணி அளவில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் பலியாகி விட்டதாக இந்திய விமானப்படை தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

பிபின் ராவத் மரண செய்தி தமிழகத்தை மட்டுமல்ல… தேசிய அளவிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. குன்னூரில் மலைப்பகுதியில் தாழ்வாக பறந்த போது விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று தகவல்கள் கசிந்து கொண்டிருக்க விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் எம்ஐ 17 ரகமாகும். ரஷ்ய நிறுவனத்திடம் இருந்து இந்தியா வாங்கி இருக்கிறது. கடுமையான வானிலையிலும் சிறப்பாக பறக்கும் திறன் கொண்ட இந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது எப்படி என்பது குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து இருக்கின்றன.

இந் நிலையில் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் பிழைத்த ஒரே விமானி வருண் சிங் குன்னூர் வெலிங்டன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். விபத்து நிகழ்ந்த தருணத்தில் என்ன மாதிரியான சூழல் என்பது பற்றிய வீடியோக்கள் வெளியாகி இருக்கின்றன.

தொடக்கத்தில் விபத்து நிகழ்ந்த பகுதியில் கொழுந்துவிட்ட எரிந்த தீயை பற்றிய யாருக்கும் பெரிதாக தெரியவில்லை. பின்னர் கொஞ்சம், கொஞ்சமாக விவரங்கள் தெரியவர மீட்பு பணிகளும் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன.

விபத்து நடந்த வனப்பகுதியில் மீட்பு குழுவினர் திரண்டு துரிதமாக செயலாற்றி கொண்டு இருந்தனர். அப்போது விபத்தில் சிக்கி இருக்கும் ஒருவர் உயிருடன் இருப்பதாக மீட்புக் குழுவினருக்கு தெரிய வரை வேகமாக மருத்துவ குழுவினரும், மீட்பு குழுவினரும் விரைந்து இருக்கின்றனர்.

சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட விபத்து தொடர்பான சில வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. அதில் தேடுதல் வேட்டையின் போது  மீட்புக் குழுவில் இருக்கும் படுகாயம் அடைந்த ஒருவர் உயிருடன் இருக்கிறார் என்று கூக்குரலிட ஒட்டு மொத்த படையும் அவரை அவசர, அவசரமாக மீட்டு கொண்டு செல்லும் பரபரப்பான வீடியோ காட்சிகள் வெளியாகி இருக்கின்றன.

விபத்து பகுதியில் மீட்புக்குழுவினரின் துரித செயல்பாடுகள் எப்படி இருந்தன என்பது பற்றியும் இந்த வீடியோவில் காட்சிகள் முழுமையாக இடம்பெற்றுள்ளன.

அந்த வீடியோ காட்சிகளில் சிலவற்றை பார்க்கலாம்…….

"

"

"

 

click me!