நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்த கட்ஜூ : விவாதத்திற்கு அழைப்பு விடுத்த உச்சநீதிமன்றம்

 
Published : Oct 19, 2016, 12:06 AM ISTUpdated : Sep 19, 2018, 02:09 AM IST
நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்த கட்ஜூ : விவாதத்திற்கு அழைப்பு விடுத்த உச்சநீதிமன்றம்

சுருக்கம்

பாலியல் பலாத்காரத்திற்குட்பட்டு இளம்பெண் சவுமியா கொலை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பை விமர்சித்த முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூவை, விவாதத்திற்கு வருமாறு உச்சநீதிமன்றம் அழைப்பு விடுத்துள்ளது.

கேரளாவைச் சேர்ந்த இளம்பெண் சவுமியா, கடந்த 2011-ல் எர்ணாகுளம் - ஷோரனூர் ரயிலில் பயணித்தார். அப்போது தமிழகத்தை சேர்ந்த கோவிந்தசாமி என்ற மாற்றுத்திறனாளி என்ற வாலிபரால் பலாத்காரத்திற்கு ஆளாகி கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மாற்றுத்திறனாளி கோவிந்தசாமிக்கு மரண தண்டனை விதித்து திரிச்சூர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டதில், மரண தண்டனை ரத்துசெய்யப்பட்டு 7 ஆண்டுகள் சிறைதண்டனையாக குறைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த தீர்ப்பு தவறானது என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ, தனது வலைதளத்தில் விமர்சித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, எந்த அடிப்படையில் தவறான தீர்ப்பு என்பதை, கட்ஜு விவாதிக்கட்டும் என்று உச்சநீதிமன்றம் அழைப்பு விடுத்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
"இந்தி படி.. இல்லன்னா டெல்லியை விட்டுப் போ!" பயிற்சியாளரை மிரட்டிய பாஜக பெண் கவுன்சிலர்!