24 ஆண்டுகளுக்குப் பிறகு அடக்கம் செய்யப்பட்ட ராணுவ வீரர் உடல் : கேரளாவில் உருக்கம்

 
Published : Oct 18, 2016, 11:54 PM ISTUpdated : Sep 19, 2018, 02:09 AM IST
24 ஆண்டுகளுக்குப் பிறகு அடக்கம் செய்யப்பட்ட ராணுவ வீரர் உடல் : கேரளாவில் உருக்கம்

சுருக்கம்

தீவிரவாதிகளுடனான சண்டையில் உயிரிழந்த ராணுவ வீரர் ஒருவரின் உடல், 24 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர் லெப்டினென்ட் இ. தாமஸ். கடந்த 1992 ஆம் ஆண்டு ஜூ மாதம் 12 ஆம் தேதி நாகாலாந்து மாநிலத்தில், தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையின்போது தாமஸ் ஜோசப் உயிரிழந்தார். உயிரிழந்த அவரின் உடலை, நாகாலாந்தின் சக்கபாமா சர்ச்சில் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், தாமஸ் ஜோசப்பின் தந்தையான சுபேதார் மேஜர் (ஓய்வு) ஏ.டி.ஜோசப், தாய் ரோசம்மா ஜோசப் ஆகியோர், மகனின் உடலை சொந்த ஊரான கேரளாவில் அடக்கம் செய்ய விரும்பினர்.

அவர்களது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், தாமஸ் ஜோசப்புடன் பணியாற்றிய சக ராணுவ வீரர்கள் முயற்சி எடுத்தனர். இதனை அடுத்து நாகலாந்தில் அடக்கம் செய்யப்பட்ட ஜோசப்பின் உடலை தோண்டி எடுத்து, கேரளாவில் உள்ள அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்ய ராணுவ அதிகாரிகள் சம்மதித்துள்ளனர்.

ராணுவ அதிகாரிகளின் ஒப்புததை அடுத்து, நாகாலாந்து விரைந்தனர் தாமசின் பேற்றோர். பின்னர், அடக்கம் செய்யப்பட்ட மகனின் உடல் அடங்கிய சவப்பெட்டியை, கேரளாவிற்கு கொண்டு வந்தனர். பின்னர் தங்களது சொந்த ஊரான கன்ஜிராமட்டோ பகுதயில் முழு அரசு மரியாதையுடன் ஜோசப்பின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

முன்னதாக ஜோசப்பின் உடலுக்கு, ஹோலி கிராஸ் சர்ச்சில் இறுதி சடங்குகளும், பிரார்த்தனைகளும் நடந்தன. இதில் ஜோசப்பின் குடும்பத்தினரும், ராணுவ உயரதிகாரிகளும் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

நாகாலாந்தில் புதைக்கப்பட்ட மகனின் உடலை 24 வருடங்களுக்குப் பிறகு, சொந்த ஊரில் அடக்கம் செய்த மனநிறைவோடு உள்ளனர் ஜோசப்பின் பெற்றோர்.

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
"இந்தி படி.. இல்லன்னா டெல்லியை விட்டுப் போ!" பயிற்சியாளரை மிரட்டிய பாஜக பெண் கவுன்சிலர்!