ஜெயப்பூர் மாவட்டத்தில் 90 அடி உயர ரயில்வே பாலத்தில் புதுமண தம்பதியர் போட்டோ சூட் நடத்திய பொழுது திடீரென ரயில் வந்ததால் தம்பதியினர் உயிரை காப்பாற்றிக்கொள்ள பாலத்தில் இருந்து கீழே குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒவ்வொரு குடும்பத்திலும் திருமணம் என்பது வாழ்வின் அடுத்த படிநிலை என்றே பார்க்கப்பட்டது. இதற்காக இரு வீட்டாரும் ஒன்றிணைந்து ஊரார் முன்னிலையில் தங்கள் வீட்டு திருமண நிகழ்வை திருவிழாவை போல் நடத்தினர். முன் காலத்தில் பெண் அழைப்பு, தாலி கட்டுதல், மறுவீடு என சொற்ப சம்பிரதாயங்களே இருந்தன. ஆனால் தற்போது மெஹந்தி, பூச்சூட்டுதல், சங்கீத், ரிஷப்சன் தொடங்கி பல்வேறு பெயர்களில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
राजस्थान के पाली जिले में एक बड़ा हादसा हुआ। राहुल मेवड़ा अपनी पत्नी जाह्नवी संग हेरिटेज पुल पर फोटो शूट करा रहे थे। तभी ट्रेन आ गई। ट्रेन से बचने को दोनों 90 फीट गहरी खाई में कूद गए। दोनों का इलाज जारी है।
🚨Disturbing Visual🚨 pic.twitter.com/WwDSTd5jrW
இப்படி பல நிகழ்ச்சிகளின் தொகுப்பாக நடைபெறும் திருமணத்தை புகைப்படம், வீடியோவாக பதிவு செய்வது வழக்கம். ஆனால் தற்போது தனித்துவம் என்ற பெயரில் திருமணத்திற்கு முந்தைய போட்டோ சூட், திருமணத்திற்கு பிந்தைய போட்டோ சூட், அவுட்டிங் போட்டோ சூட் என பல பெயர்களில் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு அவை நினைவுகளாக்கப்படுகின்றன.
மேலும் டிரெண்டிங் என்ற பெயரில் கடற்கரையில் புகைப்படம் எடுத்தல், பனிச்சிகரம் உள்ளிட்ட தனித்துவமான இடங்களில் ஆபத்தை உணராமல் புகைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட போட்டோ சூட் நிகழ்வு தான் ராஜஸ்தான் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. ஜெய்பூர் மாவட்டத்தில், ஹரிமாலியைச் சேர்ந்தவர்கள் ரகுல் மேவாடா (வயது 22), ஜான்வி தம்பதி. இவர்கள் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன் தான் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.
அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டதற்கு இது தான் காரணம்.! புதிய குண்டை தூக்கிப்போட்ட செல்லூர் ராஜூ
இதனிடையே புதுமன தம்பதிகள் புகைப்படம் எடுப்பதற்காக நண்பர்களுடன் இணைந்து புகைப்பட கலைஞர்களை அழைத்துக் கொண்டு ஜோக்மண்டி ரயில்வே பாலத்திறகு சென்றுள்ளனர். தம்பதிகள் இருவரும் ரயில்வே பாலத்தில் நின்று கொண்டிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக அவ்வழியாக பயணிகள் ரயில் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தம்பதியர் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள பாலத்தில் இருந்து கீழே குதித்தனர்.
இதில் இருவரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.