
கார்ப்பரேட் வரியை குறைத்த மத்திய அரசு, தனிநபர் வருமான வரிக்கான உச்சவரம்பை அதிகரிக்காதது நடுத்தர மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
2018-2019ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரிக்கான உச்சவரம்பு உயர்த்தப்படலாம் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வருமான வரி உச்சவரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
ஆண்டுக்கு 250 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டும் நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி 30%லிருந்து 25% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
ஆனால் தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆண்டு வருமானம் 2.5 லட்சம் ரூபாய் வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னும் இந்த அளவுதான் இருந்தது. தனிநபர் வருமான வரி விலக்கு 5 லட்சம் ரூபாய் வரை உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதில் எந்த மாற்றமும் செய்யப்படாததால் நடுத்தர மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
தனிநபர் வருமான வரி விவரங்கள்:
* 2.5 லட்சம் வரை வருமான வரி இல்லை
* 2.5 லட்சம் முதல் 5 லட்சம் வரை 5% வரி
* 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை 20% வரி
* 10 லட்சத்திற்கு மேல் 30% வரி