மே மாதத்தில் கொடூர கொரோனா இந்தியாவில் உச்சத்தை எட்டும்.. உலக சுகாதார அமைப்பை தொடர்ந்து மற்றொரு எச்சரிக்கை.!

By vinoth kumarFirst Published Apr 22, 2020, 6:56 PM IST
Highlights

இந்தியாவில் கோரதாண்டவம் ஆடிவரும் கொரோனா வைரஸ் தொற்று மே மாதம் உச்சத்தை எட்டும் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தியாவில் கோரதாண்டவம் ஆடிவரும் கொரோனா வைரஸ் தொற்று மே மாதம் உச்சத்தை எட்டும் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20,000 தாண்டியுள்ளது.  உயிரிழப்பு எண்ணிக்கை 652 ஆகவும் அதிகரித்துள்ளது. இதுவரை 3,960  பேர் குணமடைந்து வீட்டிற்குத் திரும்பியுள்ளனர். இந்தியாவில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரம் இருக்கிறது. இங்கு பாதிப்பு எண்ணிக்கை 5,000 தாண்டியுள்ளது. 

இந்நிலையில், சர்வதேச நிறுவனமான புரோடிவிட்டியுடன் சேர்ந்து டைம்ஸ் பத்திரிகை குழுமம் ஆய்வு நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது. அமெரிக்கா, இத்தாலியில் நேரிட்ட பாதிப்பை அடிப்படையாக கொண்ட சதவீத மதிப்பீடு உள்ளிட்ட 3 மாதிரிகளை கணக்கில் கொண்டு முடிவை வெளியிட்டுள்ளது. அதில், மே மாதம் 22ம் தேதி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 75,000 தாண்டும் என அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸின் முன்னேற்றத்தை கணிக்க குழு 3 மாதிரிகளை உருவாக்கியது. ஒவ்வொரு மாதிரியும் வெவ்வேறு நிலைமைகளின் கீழ் எவ்வாறு கொரோனா பரவும்  என்பதற்கான மதிப்பீட்டை வழங்கியது. நெருக்கடிக்கு அரசாங்கமும் சுகாதார உள்கட்டமைப்பும் எவ்வாறு செயல்பட முடியும் என்பதற்கான வழிகளை வழங்கின. மே 15ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால், செப்டம்பர் 15ம் தேதிக்குள் பாதிப்பு பூஜ்யமாக குறைய வாய்ப்பு உள்ளதாகவும், மே 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டால், ஜூன் மாத மத்தியில் பூஜ்யமாக குறைய வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே உலக சுகாதார அமைப்பும் மே மாதத்தில் உச்சத்தை எட்டும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

click me!