பஞ்சாயத்துக்கு வந்து வாக்குறுதி கொடுத்த அமித் ஷா... போராட்டத்தை கைவிட்ட மருத்துவர்கள்...!

By vinoth kumarFirst Published Apr 22, 2020, 1:31 PM IST
Highlights

நாடு முழுவதும் நோய் தடுப்பு பணியில் இருக்கும் சுகாதார பணியாளர்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இதனை, கண்டித்து மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்க சட்டம் இயற்றக்கோரியும் இந்திய மருத்துவர்கள் சங்கம் நாடு தழுவிய ஓயிட் அலர்ட் எனப்படும் அடையாள போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. 

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்திருக்கிறார். இதனையடுத்து, மருத்துவர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் நோய் தடுப்பு பணியில் இருக்கும் சுகாதார பணியாளர்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இதனை, கண்டித்து மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்க சட்டம் இயற்றக்கோரியும் இந்திய மருத்துவர்கள் சங்கம் நாடு தழுவிய ஓயிட் அலர்ட் எனப்படும் அடையாள போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. இதன்படி நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் இன்றிரவு மெழுவர்த்தி ஏந்தி வலியுறுத்த வேண்டும் என வியாழக்கிழமையை கருப்பு தினமாக அனுசரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், மருத்துவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆகியோர் ஆகியோர் இந்திய மருத்துவர்கள் சங்க நிர்வாகிகளுடன் காணொலிகாட்சி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மருத்துவர்கள் இக்கட்டான சூழலில் அர்பணிப்புடன் சேவையாற்றி வருவதாக அமித் ஷா பாராட்டினார். மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும் என்றும் அமித் ஷா உறுதியளித்தார். 

மேலும்,  மருத்துவர்ளுக்கு அரசு துணையாக இருக்கும் என்பதால் அடையாள போராட்டம் கூட நடத்த வேண்டாம் என அவர் வேண்டுகோள் விடுத்தார். இதனை, ஏற்றுக்கொண்ட மருத்துவர்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக இந்திய மருத்துவர்கள் சங்க தலைவர் ராஜேஷ் சர்மா தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று ஒழுிப்பு நடவடிக்கையில் அனைவரும் ஈடுபட்டுள்ள நிலையில் இதுபோன்ற போராட்டங்கள் நம் நாட்டின் ஒருமைபாட்டிற்கு தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும் என்று கூறியுள்ளார். 

click me!