இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9111 பேருக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில், 60 ஆயிரம் பேர் மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஒரே நாளில் 27 பேர் பலி
உலகம் முழுவதும் கடந்த 2019 முதல் 2021 ஆம் ஆண்டு வரை ஏற்பட்ட கொரோனா பாதிப்பால் பல லட்சம் மக்கள் தங்கள் உயிரை இழந்தனர். மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கையை வாழ முடியாமல் முடங்கி இருந்தனர். இதனையடுத்து கொரோனா தடுப்பூசி மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் விலகி இயல்பு வாழ்க்கையை மீண்டும் தொடங்கி உள்ளனர். ஆனால் மீண்டும் கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் அதிகரிக்க தொடங்கியது மக்களை அதிர்ச்சி அடைய வைத்தது. இந்தியாவை பொறுத்தவரை நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கும் கீழாக கொரோனா பதிப்பு பதிவாகி வந்த நிலையில் தற்பொழுது நாளொன்றுக்கு நாடு முழுவதும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கடந்த சில நாட்களாக பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. இதனையடுத்து மத்திய மற்றும் மாநில அரசின் தீவிர நடவடிக்கை காரணமாக மீண்டும் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது.
undefined
தரதரவென இழுத்து செல்லப்பட்ட நோயாளி.. தெலங்கானா அரசு மருத்துவமனையின் அவலம் - வைரல் வீடியோ!!
குறையும் கொரோனா
கடந்த மூன்று நாட்களாக 10,000 மேற்பட்டோர் பாதிப்பு இருந்து நிலையில் இன்றைய கொரோனா பதிப்பை பொருத்தவரை 10 ஆயிரத்திற்கு கீழாக இறங்கி 9111 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்பொழுது மருத்துவமனையில் மற்றும் வீடுகளில் 60 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொரோனா பதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர் கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை 27 பேர் கொரோனா பாதிப்பின் காரணமாக உயிரிழந்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் 5,866 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 514 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. தற்போது,3,195 பேர் கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளனர். வரும் நாட்களில் கொரோனா பாதிப்பு குறைய வாய்ப்பு இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்
Summer heat wave : கொளுத்தும் கோடை வெயில்! - 5 மாநிலங்களுக்கு வானிலை மையம் அபாய எச்சரிக்கை!