விபத்தான விமானத்தில் பயணம் செய்த 40 பேருக்கு கொரோனா... சோகத்திலும் கொடுமை..!

Published : Aug 08, 2020, 11:49 AM IST
விபத்தான விமானத்தில் பயணம் செய்த 40 பேருக்கு கொரோனா... சோகத்திலும் கொடுமை..!

சுருக்கம்

கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த 40 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த 40 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

விமானத்தில் உயிர் தப்பியவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டதுநேற்று துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோட்டில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்துள்ள துயரச்சம்பவம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. 50 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் விமானத்தில் பயணம் செய்தவர்களில் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பேரச்சத்தால் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு கோரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதனால், விபத்து ஏற்பட்டிருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிககையாக மீட்கப்பட்ட அனைத்துப் பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்தது கேரள சுகாதாரத்துறை.

அதில்தான், 40 பேருக்கு தொற்று உ றுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே, விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனாவும் சேர்ந்துகொண்டிருப்பது மீளாத்துயரம் எனச் சொல்லப்படுகிறது.
 

PREV
click me!

Recommended Stories

1,750 ஏக்கரில் மாருதியின் மெகா பேக்டரி ரெடி! வருடம் 10 லட்சம் கார்கள் தயாரிப்பு.. எந்த மாநிலம் தெரியுமா?
2507 விமானங்கள் ரத்து, 3 லட்சம் பயணிகள் பாதிப்பு… இண்டிகோ மீது அரசு எடுத்த அதிரடி முடிவு