கொரோனாவால் ஆந்திரா அலறுகிறது.. கர்நாடகா கதறுகிறது..!

By karthikeyan VFirst Published Jul 31, 2020, 9:51 PM IST
Highlights

கர்நாடகாவில் இன்று மேலும் 5843 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,21,415ஆக அதிகரித்துள்ளது.
 

கர்நாடகாவில் இன்று மேலும் 5843 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,21,415ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 16 லட்சத்தை கடந்துவிட்டது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களை தொடர்ந்து கடந்த சில தினங்களாக கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு மிகக்கடுமையாக உள்ளது. ஆந்திராவிலும் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதால் அதிகமான பாதிப்புகள் கண்டறியப்படுகின்றன.

 ஆந்திராவில் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 10,376 பேருக்கு தொற்று உறுதியானதால் ஆந்திராவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,40,933ஆக அதிகரித்துள்ளது. ஆந்திராவில் 3 நாட்களாக தினமும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பாதிப்பு உறுதியாகிவருகிறது.

கர்நாடகாவில் தமிழ்நாடு, ஆந்திரா அளவிற்கு அதிகமான பரிசோதனைகள் செய்யப்படவில்லை. ஆனாலும் தினமும் பாதிப்பு சுமார் 6 ஆயிரம் என்கிற அளவிலேயே உள்ளது. இன்று 5843 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து கர்நாடகாவில் மொத்த பாதிப்பு 1,21,415ஆக அதிகரித்துள்ளது. 

பெங்களூருவில் இன்று மேலும் 2220 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 55544ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் 49 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்ட நிலையில், 72005 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இன்று மேலும் 82 பேர் உயிரிழந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை 2314ஆக அதிகரித்துள்ளது. 

மகாராஷ்டிரா, தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மிகக்கடுமையாக உள்ளது. 
 

click me!