ஆந்திராவை அலறவிடும் கொரோனா.. தினமும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பாதிப்பு

By karthikeyan VFirst Published Jul 31, 2020, 7:38 PM IST
Highlights

ஆந்திராவில் இன்று மேலும் 10,376 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதையடுத்து அம்மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,40,933ஆக அதிகரித்துள்ளது. 
 

ஆந்திராவில் இன்று மேலும் 10,376 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதையடுத்து அம்மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,40,933ஆக அதிகரித்துள்ளது. 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 16 லட்சத்தை கடந்துவிட்டது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களில் தான் பாதிப்பு மிகக்கடுமையாக இருந்தது. ஆனால் கடந்த சில தினங்களாக ஆந்திராவில் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதால் தினமும் அதிகமான பாதிப்புகள் கண்டறியப்படுகின்றன. 

தினமும் ஆந்திராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டிவருகிறது. ஆந்திராவில் 3 நாட்களாக தினமும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பாதிப்பு உறுதியாகிறது. இன்று ஒரேநாளில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 10,376 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதையடுத்து, ஆந்திராவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,40,933ஆக அதிகரித்துள்ளது. 

ஆந்திராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில், இதுவரை 60969 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 75720 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இன்று ஒரே நாளில் 64 பேர் உயிரிழந்ததையடுத்து, உயிரிழப்பு எண்ணிக்கை 1349ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் தினமும் 6 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்பு உறுதியாகிவந்த நிலையில், நேற்றும் இன்றும் 6 ஆயிரத்துக்கும் குறைவான பாதிப்பே பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டைவிட சுமார் 2 மடங்கு அதிகமான் பாதிப்பு ஆந்திராவில் தினமும் கண்டறியப்படுகிறது.

click me!