அதிகரிக்கும் கொரோனா.. இன்று ஒரே நாளில் 16,561 பேருக்கு பாதிப்பு.. புதிதாக 49 பேர் பலி

By Thanalakshmi V  |  First Published Aug 12, 2022, 10:42 AM IST

India corona : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 16,561பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் புதிதாக 49 பேர் உயிரிழந்துள்ளனர்
 


இதுக்குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 16,561பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. நேற்று முன்தினம்16,047 ஆகவும் நேற்று  16,299 ஆகவும் இன்று16,561 ஆக கொரோனா அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,42,23,557ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் படிக்க:ஏற்ற இறக்கத்தில் கொரோனா.. இன்று ஒரே நாளில் 16,299 பேருக்கு பாதிப்பு.. புதிதாக 54 பேர் பலி..

Tap to resize

Latest Videos

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றிலிருந்து 18,053 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை  4,35,73,094 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்போர் எண்ணிக்கை 1,23,535 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 49 பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும் படிக்க:சற்று குறைந்த கொரோனா.. இன்று ஒரே நாளில் 16,047 பேருக்கு பாதிப்பு.. புதிதாக 54 பேர் பலி..

நாட்டில் இதுவரை கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 5,26,928 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் கொரோனா உயிரிழப்பின் விகிதம் 1.19 % ஆக குறைந்துள்ளது. அதே போல் சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.28% ஆக குறைந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 98.53 % ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 207.47 கோடிக்கு அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில்17,72,441 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

click me!