
பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஷாலிமர்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகியவை அதிர்ச்சியளிக்கும் வகையில் நேற்று மாலை மோதிக் கொண்டன. ஒன்றுடன் ஒன்று மோதியதில் கோரமண்டல் பயணிகள் ரயில் பெட்டிகள் தூக்கி வீசப்பட்டன. ஒரு பேட்டியின் மேல் மற்றொரு பேட்டி என்று கோர விபத்தை சந்தித்து இருந்தது.
பாலாசோரில் விபத்துக்குள்ளான இடம் வான்வழி மூலம் படமாக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கொல்கத்தாவில் இருந்து தெற்கே 250 கிமீ தொலைவிலும், புவனேஸ்வருக்கு வடக்கே 170 கிமீ தொலைவிலும் பாலசோர் மாவட்டத்தில் உள்ளனகா பாஹாநாகா ரயில் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் ரயில் விபத்து ஏற்பட்டது, இது குறித்து விசாரணை நடத்த ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
பிரதமர் மோடி அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து, ரயில் விபத்து நடந்த இடத்திற்கு பிரதமர் செல்ல இருக்கிறார். மேலும் விபத்தில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூற இருக்கிறார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சென்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சம்பவ இடத்திற்கு விரைந்து இருக்கிறார். இந்த கோர ரயில் விபத்து நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.
வைரலாகும் வீடியோ தொகுப்பு: