தோண்ட தோண்ட எலும்புக்கூடுகள்... கற்பழிக்கப்பட்ட 29 சிறுமிகள்! ஹாஸ்டலில் நடந்த அட்டூழியம்

Asianet News Tamil  
Published : Jul 28, 2018, 10:44 AM ISTUpdated : Sep 19, 2018, 02:46 AM IST
தோண்ட தோண்ட எலும்புக்கூடுகள்... கற்பழிக்கப்பட்ட 29 சிறுமிகள்! ஹாஸ்டலில் நடந்த அட்டூழியம்

சுருக்கம்

Cops start digging to locate inmates skeleton 10 arrested so far

பாலியல் வன்கொடுமை நடந்ததாகக் புகார் எழுந்துள்ள  காப்பகத்தில் தோண்ட தோண்ட எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் முசாபூர் பகுதியில் உள்ள ஒரு   விடுதியில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை  செய்யப்படுவதாக புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அங்கு போலீசார் அங்கு தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த விடுதியில் தங்கியிருந்த 44 சிறுமிகளில் 29 பேர்  பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த விடுதியில் தங்கியிருக்கும் அனைத்து சிறுமிகளுக்கும்  டாக்டர்கள் பரிசோதனை  செய்து பார்த்ததில் 29 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதும், பல சிறுமிகளுக்கு கருகலைப்பு செய்யப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. இன்னும் மீதமுள்ள சிறுமிகளின் பரிசோதனை அறிக்கையும் வரவுள்ளது.

இதில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில், அந்த விடுதியில் இதற்கு முன்பு  தங்கியிருந்த  மாணவிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திக் கொண்டிருக்கையில், விடுதியில் ஒரு சிறுமி கொலை செய்யப்பட்டு, புதைக்கப்பட்டிருப்பதாக சிறுமிகள் புகார் அளித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, போலீசார் அரசு விடுதியின் வளாகத்தில் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் நீதிபதி பிரியா குப்தா மற்றும் மூத்த போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் விடுதியின் வளாகத்தில் தோண்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுவரை இந்த சம்பவம் தொடர்பாக போலீசார், காப்பகத்தின் பாதுகாப்பு அதிகாரி, கண்காணிப்பாளர், பணியாளர்கள் என மொத்தம் 11 பேரை கைது செய்துள்ளனர். 

இந்நிலையில், போலீசார் நேற்று முன்தினம் விடுதியின் உள்ளே சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பூட்டியிருந்த ஒரு அறையிலிருந்து பல எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அனைத்தும் மனித எலும்புக்கூடுகள்தான் என உறுதி செய்த போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

Paper Currency : ஜூன் 30-க்கு பிறகு காகித கரன்சி நோட்டுகள் செல்லாதா? மத்திய அரசு விளக்கம்!
ஒரு கிராமம் முழுக்க திருமணமே செய்துகொள்ளாமல் வாழும் ஆண்கள்! தண்ணி பிரச்சனைக்காக இப்படி ஒரு முடிவா? ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்!