டான்ஸ் அகாடமியில் பயங்கரம்! 16 வயது சிறுமியை சீரழித்த டான்ஸ் மாஸ்டர்!

 
Published : Jul 27, 2018, 03:57 PM ISTUpdated : Sep 19, 2018, 02:46 AM IST
டான்ஸ் அகாடமியில் பயங்கரம்! 16 வயது சிறுமியை சீரழித்த டான்ஸ் மாஸ்டர்!

சுருக்கம்

Dance Academy Dance Master 16-year-old girl rape

நடன வகுப்புக்கு சென்ற 16 வயது சிறுமியை ஆசிரியர் ஓராண்டாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்துவதற்காக பல்வேறு நடன நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகள் நடத்தப்படுகின்றன. இதில் பங்கேற்போர் குறுகிய காலத்தில் பேர், புகழை அடைவதால், பல பெற்றோர்கள் தங்களது குழந்தைகளையும் நடன வகுப்புக்கு அனுப்ப வேண்டும் என கருதுகின்றனர். சில குழந்தைகளுக்கு விருப்பமே இல்லாவிட்டாலும், அவர்கள் வலுக்கட்டாயமாக நடன வகுப்புகளுக்கு அனுப்பப்படுகின்றனர்.
 
உத்தரப்பிரதேச மாநிலம் ஷாகிதாபாத் பகுதியில் ருத்ரா டான்ஸ் அகாடமி என்ற பெயரில் இயங்கிவரும் நடனப் பள்ளியில் 2 ஆண்டுகளுக்கு முன்பு, 16 வயது சிறுமி ஒருவர் டான்ஸ் வகுப்பில் சேர்ந்தார். அவருக்கு சுமித் கோஷ் என்ற டான்ஸ் மாஸ்டர், நடனம் கற்றுக் கொடுத்தார். ஓராண்டுக்கு முன்பு விடுமுறை தினத்தில் சிறுமியை வகுப்புக்கு வருமாறு டான்ஸ் மாஸ்டர் அழைத்தார்.
 
அதுகுறித்து சிறுமி கேட்டபோது, முக்கியமான ஒரு ஒத்திகை இருப்பதாகக் கூறியுள்ளார். இதையடுத்து, குறிப்பிட்ட அந்த நாளில் தன்னந்தனியாக சென்ற சிறுமியை, வகுப்பறையிலேயே வைத்து, டான்ஸ் மாஸ்டர் பாலியல் பலாத்காரம் செய்தார். அதை வீடியோவும் எடுத்து வைத்த டான்ஸ் மாஸ்டர், அவ்வபோது அதைக் காட்டி மிரட்டி தொடர்ந்து சிறுமியுடன் உடலுறவு கொண்டுள்ளார். சிறுமியை தனது ஆசைக்கு பயன்படுத்திக் கொண்ட டான்ஸ் மாஸ்டர், சிறுமியை மிரட்டி அடிக்கடி பணமும் வாங்கியுள்ளார். கடந்த ஓராண்டில் பல முறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி, ரூ.2 லட்சத்துக்கு மேல் பணமும் கொடுத்து ஏமாந்தார்.
 
தொடக்கத்தில் ஆர்வமாக நடன வகுப்புக்குச் சென்ற மகள், தற்போதெல்லாம் அங்கு செல்ல பிடிக்காமல் இருப்பதையும், நாளுக்கு நாள் அவரது படிப்புத் திறன் குறைந்து வருவதையும் அறிந்த பெற்றோர், அது குறித்து துருவி துருவி விசாரித்தனர். ஒரு கட்டத்திற்கு மேல் மறைக்க முடியாத சிறுமி, டான்ஸ் மாஸ்டரின் பாலியல் பலாத்காரம் குறித்து கூறியுள்ளார். மகளுக்கு நடந்த கொடுமையை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், டான்ஸ் மாஸ்டர் சுமித் கோஷ் மீது காவல்துறையில் புகார் அளித்தனர். இதையடுத்து, அவனை கைது செய்த காவல்துறையினர், அவனுக்கு உதவியாக இருந்ததாக மேலும் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
"இந்தி படி.. இல்லன்னா டெல்லியை விட்டுப் போ!" பயிற்சியாளரை மிரட்டிய பாஜக பெண் கவுன்சிலர்!